Latest News

கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 12, 2017

திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள்… சிறுமிகளுக்கு நேரும் துயரம்.. வேதனை…!

தமிழகத்தில் திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், கோவை மாவட்டங்கள் பின்னலாடை, பஞ்சாலை உள்ளிட்ட துணி சார்ந்த தொழிற்சாலைகள் நிறைந்த பகுதிகளாக உள்ளன.
இங்கு வேலை செய்யும் தொழிலாளர்களின் உடல்நிலை மிகுந்த கவலை அளிக்கிறது.
12 மணி நேர வேலை, 5 ஆயிரம் ரூபாய் சம்பளம், நேரா நேராத்திற்கு சாப்பாடு கிடையாது, உணவு உண்ண, இயற்கை உபாதைகளை கழிக்க, அமர்ந்து ஓய்வெடுக்க அதிக பட்சம் வெறும் அரை மணி நேரம் தான்.
பெரும்பாலும் இங்கு வேலை செய்பவர்கள், படிக்காத, ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த சிறுமிகள் தான்.
16 வயது ஆகிவிட்டால் வேலைக்கு அனுப்பி விடுகின்றனர். திருமணத்திற்கு பணம் சேர்ப்பதற்காக பெண்களும் மாடாக உழைக்கின்றனர். அதன் விளைவு தான் கொடுமை.
தனியார் நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் 60 சதவீத சிறுமிகள் மற்றும் இளம் பெண்கள் வயதிற்கேற்ற எடை இல்லை.
இதற்கு காரணம் காலை 6 மணிக்கு ஆலையில் இருக்க வேண்டுமென்றால், காலை 3 மணிக்கு எழ வேண்டும். 4 மணிக்கு பஸ் வந்துவிடும். மாலை 7 மணிக்கு தான் வீடு திரும்புவார்கள்.
ஆலையில் சரியான உணவு வழங்கப்படுவதில்லை. ஆனால் அதற்கு கட்டணம் மட்டும் வசூலித்து விடுகின்றனர்.
பாலியல் துன்புறுத்தல், உழைப்புச் சுரண்டலை யாரிடமும் கூற முடியாத நிலையில் தவித்து வருகின்றனர் நம் தமிழக பெண்கள்.
இதுகுறித்து ஆங்கில ஊடகமான என்.டி.டி.வி பெரிய கட்டுரையையே வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.