Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 14, 2017

உலகின் அதி பயங்கர நீச்சல் குளம் இதுதான் ! தில் இருந்தால் மட்டும் குளிக்க முடியும் ?


அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ஹௌஸ்டன் மாநகரில் உள்ள பிரம்மாண்டமான அடுக்குமாடி குடியிருப்பில் 40 மாடி உயரத்தில் நீச்சல் குளம் உள்ளது.

ஹௌஸ்டன் நகரில் 40 அடுக்குகளை கொண்ட சொகுசு குடியிருப்பு வளாகம் உள்ளது. இதில் என்ன சிறப்பு என்று நீங்கள் வினவுவது புரிகிறது. இந்த கட்டடத்தின் 40-ஆவது மாடியின் முனையில் நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பம்சமாகும். பிரம்மாண்டமான இந்த நீச்சல் குளம் கட்டடத்திலிருந்து 10 அடி ஆழத்துக்கு விரிவாக உள்ளது.

இதன் மூலம் நகரின் மீதே நீச்சல் அடிக்கும் உணர்வும், வானத்தில் பறக்கும் உணர்வு ஏற்படும் என்பதில் ஐயம் இல்லை. அதேவேளையில் பறவைகள் கண் பார்வைக்குள் நகரம் எப்படி தெரியுமோ அது போல் இந்த நீச்சல் குளமும் வடிவமைக்கப்பட்டது.

இந்த வீடியோவில் காண்பிக்கப்பட்டது போல் நீச்சல் அடிக்கும் மனிதருக்கு குமட்டல் ஏதும் ஏற்படவில்லை என்றாலும் அவர் வயிற்றுக்குள் புளி கரைத்திருக்கும். எனினும் காற்றில் மிதந்தது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தியிருக்கும்.

8 அடி தடிமன் கொண்ட கண்ணாடியால் இந்த குளம் உருவாக்கப்பட்டது. இந்த குளத்தில் மன தைரியம் உள்ளவர்கள் மட்டுமே நீச்சல் அடிக்க முடியும்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.