June 14, 2017
சபாநாயகரைக் கண்டித்து சாலை மறியல் - ஸ்டாலின் உட்பட திமுக, காங். எம்.எல்.ஏ.க்கள் கைது!
சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் தலைமைச் செயலகம் எதிரே ராஜாஜி சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை போலீசார் கைது செய்தனர்.
நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அதிமுக எம்எல்ஏக்கள் பணம் வாங்கியதாக எம்எல்ஏ சரவணன் பேசிய வீடியோ குறித்து விவாதிக்க திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர். எம்எல்ஏ சரவணன் வீடியோ விவகாரம் குறித்து சிறப்பு கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினர்.
தொடர்ந்து பதாகைகளை ஏந்தி திமுகவினர் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் சபாநாயகர் ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோரை வெளியேற்ற உத்தரவிட்டார். இதனையடுத்து அவைக்காவலர்களால் வெளியேற்றப்பட்ட பெரும்பான்மை திமுக எம்எல்ஏக்கள் ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் மோசடி செய்தது நியாயம் தானா. தமிழக அரசை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோஷங்களுடன் திமுகவினர் மறியல் செய்தனர். கடந்த பிப்ரவரி மாதம் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது வெளியேற்றப்பட்ட எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் கிழிந்த சட்டையுடன் வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சபாநாயகரைக் கண்டித்து சாலை மறியல் - ஸ்டாலின் உட்பட திமுக, காங். எம்.எல்.ஏ.க்கள் கைது!
Reviewed by Admin
on
June 14, 2017
Rating: 5
Reviewed by Admin
on
June 14, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.