June 21, 2017
மு.க.ஸ்டாலினிடம் ஆதரவு கேட்டார் வெங்கைய நாயுடு
தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத்துக்கு ஆதரவு தெரிவிக்குமாறு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு கேட்டுக்கொண்டார்.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிகாலம் வரும் ஜூலை மாதத்துடன் முடிவடைகிறது. ஜூலை 17ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தநிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ராம்நாத் கோவிந்த் ஜனபாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் பீகார் மாநில ஆளுநர். வேட்பாளராக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தனது ஆளுநர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.
இதனிடையே, பாஜக மூத்த தலைவர்கள் பல்வேறு கட்சித் தலைவர்களிடம் ராம்நாத்துக்கு ஆதரவு கேட்டு வருகின்றனர். தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுக இன்னும் தனது முடிவை அறிவிக்கவில்லை. இதனிடையே, திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு, ராம்நாத்துக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
முன்னதாக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இதுதொடர்பாக பேசிய வெங்கைய நாயுடு, வரும் 23ஆம் தேதி ராம்நாத் கோவிந்த் வேட்பு மனுத் தாக்கல் செய்யும் நிகழ்வுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
இதனிடையே, எதிர்க்கட்சிகள் நாளை (22ஆம் தேதி) ஆலோசனைக் கூட்டம் நடத்துகின்றன. அப்போது, பொது வேட்பாளரையும் நிறுத்துவதாக அல்லது தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளரை ஆதரிப்பதாக என்று முடிவு எடுக்கப்படுகிறது.
மு.க.ஸ்டாலினிடம் ஆதரவு கேட்டார் வெங்கைய நாயுடு
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
June 21, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
June 21, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.