Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 13, 2017

பிரித்தானியாவில் தொங்கு பாராளுமன்றம்: ஆட்சியை கைப்பற்றப்போவது யார்?


பிரிட்டன் பாராளுமன்ற தேர்தல் வாக்குப் பதிவு நேற்று முடிவடைந்த நிலையில், இன்று வாக்குகள் எண்ணும் பணிகள் இன்று நடைபெற்று வந்தது.

இதில், பிரதமர் தெரசா மே தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சிக்கும், ஜெர்மி கார்பின் தலைமையிலான தொழிலாளர் கட்சிக்கும் இடையில் போட்டி நிலவியது.

தொடக்கத்தில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் தொழிலாளர் கட்சி முன்னிலை பெற்றுது. ஆனால் இறுதியில் கன்சர்வேட்டிவ் கட்சி தொழிலாளர் கட்சியை விட சுமார் 50 இடங்களை அதிகம் வெற்றி பெற்றுள்ளது.

மொத்தமுள்ள 650 இடங்களில் 645 இடங்களுக்கும் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி 314 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தொழிலாளர் கட்சி 260 இடங்களை பிடித்துள்ளது. இன்னும் 5 இடங்களின் முடிவுகள் தான் மீதமுள்ளது.

இதனால், கன்சர்வேட்டிவ் கட்சி மெஜாரிட்டையை இழந்துள்ளது. மெஜாரிட்டி பெறுவதற்கு 326 தொகுதிகளில் வெற்றி பெற்றாக வேண்டும்.

இதனால், ஆட்சி அமைப்பதற்கு பிரதமர் தெரசா மே இதர கட்சிகளின் ஆதரவை எதிர்ப்பார்க்கும் நிலை உருவாகியுள்ளது. இதனால் பிரிட்டனில் தொங்கு பாராளுமன்றம் ஏற்படுவது உறுதியாகியுள்ளது.
ஸ்காட்லாந்து தேசியவாத கட்சி 35, லிபரல் ஜனநாயக கட்சி 12, ஜனநாயக ஒற்றுமைவாத கட்சி 10 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதனால் மற்ற கட்சிகளை தெரசா மே அணுகி கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.