June 20, 2017
நேற்று பச்சை துண்டு, இன்று காவி துண்டு…! நாளை…? தமிழர்கள் தலையில் துண்டு..!
விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் அவரை சந்தித்தார்.
இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு,
“நடிகர் ரஜினிகாந்த் உடனான சந்திப்பு திருப்தியாக உள்ளது. ரஜினிகாந்த் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
நதிகள் இணைப்புக்காக நிச்சயமாக ரூ.1 கோடி நிதி தருவேன் என்று உறுதியளித்தார். மேலும், மத்திய அரசு மகாநதி, கோதாவரி, தென்பண்ணை ஆகிய ஆறுகளை காவிரி ஆறுடன் இணைக்க வேண்டும்” என்று கூறினார்.
இதனை தொடர்ந்து,
இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் போயஸ் கார்டனிலுள்ள ரஜினி வீட்டில் அவரை நேற்று சந்தித்து பேசினார்.
சுமார் 45 நிமிடம் நடந்த இந்த சந்திப்பின்போது, இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
இது குறித்து நிருபர்களிடம் ரஜினி கூறும்போது, ‘இந்த சந்திப்பின்போது அரசியல் எதுவும் பேசவில்லை’ என்றார்.
இப்படி பல கட்டமாக அமைப்பு சார்ந்த நிர்வாகிகள் ரஜினியை சந்தித்து வருவது பலருக்கும் சந்தேகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
அய்யாகண்ணு சந்திப்பில் கூட நதி நீர் இணைப்பு திட்டத்திற்கு நிதி பெற வேண்டிய பின்னணி உள்ளது, ஆனால் மதம் சார்ந்த அமைப்புகள் சந்தித்து வருவது தான் ஆச்சர்யமான விசயமாக உள்ளது.
எது எவ்வாறாயினும் மாற்று அரசியலை வேண்டி மக்கள் தவிக்கின்றனர். திரை உலக பின்னணி இல்லாத, மக்கள் நலனை மட்டுமே எண்ணத்தில் கொண்ட ஒரு ஆட்சியை எதிர் பார்க்கின்றனர்.
மாற்றம் முன்னேற்றம் என்று வாழ்வில் வருமோ அப்போது தான் தனி மனித வளர்ச்சியும், சமுதாய வளர்ச்சியும் தழைத்து ஓங்கும்.
நேற்று பச்சை துண்டு, இன்று காவி துண்டு…! நாளை…? தமிழர்கள் தலையில் துண்டு..!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
June 20, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
June 20, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.