June 28, 2017
சுப்ரீம் கோர்ட் மீது ஹெலிகாப்டர் மூலம் தாக்குதல் : வெனிசுலா அதிபருக்கு எதிராக வலுக்கும் போராட்டம் !
வெனிசுலா நாட்டில் உள்ள சுப்ரீம் கோர்ட் மீது ஹெலிகாப்டர் மூலம் தாக்குதல் நடத்தியதற்கு அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மடுரோ கண்டனம் தெரிவித்துள்ளார். அதிபர் நிக்கோலஸ் மடுரோவிற்கு எதிராக கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக பல்வேறு வன்முறை சம்பவங்களும், போராட்டங்களும் வெனிசுலாவில் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
அதிபர் நிக்கோலஸ் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், தலைநகர் கராகஸில் உள்ள சுப்ரீம் கோர்ட் மீது ராணுவ அதிகாரி ஹெலிகாப்டர் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளார். சுப்ரீம் கோர்டை சுற்றி ஹெலிகாப்டரில் வந்த அவர் துப்பாக்கி மற்றும் கையெறி குண்டுகளை வீசி தாக்குதலில் ஈடபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த தாக்குதல் குறித்து ராணுவ அதிகாரி ஆஸ்கார் பெரெஸ் இன்ஸ்டாகிராமில் தாம் பேசிய வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் வெனிசுலா மக்களே, அன்பு சகோதரர்களே! சமாதானத்திற்காகவும், இடைக்கால குற்றவியல் அரசாங்கத்திற்கு எதிராகவும் தாங்கள் ஒரு குழுவாக உள்ளோம் என்றார். தாங்கள் எந்த ஒரு அரசியல் கட்சி சார்ந்தவர்களோ அல்லது அமைப்பை சேர்ந்தவர்களோ இல்லை. நாங்கள் தேசியவாதிகள் மற்றும் நாட்டுப் பற்று மிக்கவர்கள். இந்த தாக்குதல் பொறுப்பற்ற அரசுக்கு எதிரானது என பேசியுள்ளார்.
தாக்குதல் நடைபெற்ற பகுதியில் அதிபர் மாளிகையும், அரசு அலுவலகங்களும் உள்ளதால் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. இத்தாக்குதலில் ஏற்பட்ட உயிர்சேதம் அல்லது காயமடைந்தவர்கள் பற்றிய விவரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை. தனது எதிர்ப்பாளர்களின் இந்த தீவிரவாத தாக்குதலுக்கு வெனிசுலா அதிபர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதிபருக்கு எதிராக நடைபெற்று வரும் வன்முறை மற்றும் போராட்டத்தில் இதுவரை 75 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சுப்ரீம் கோர்ட் மீது ஹெலிகாப்டர் மூலம் தாக்குதல் : வெனிசுலா அதிபருக்கு எதிராக வலுக்கும் போராட்டம் !
Reviewed by Admin
on
June 28, 2017
Rating: 5
Reviewed by Admin
on
June 28, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.