Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 19, 2017

சீருடைக்குப் பணம் செலுத்த முடியாததால் பள்ளியே ஆடைகளைக் களைந்த பரிதாபம்!


பீகார் மாநிலம் சிக்ராலா கிராமத்தில் உள்ள தனியார் பள்ளி பி.ஆர். எஜூகேஷன் அகாடமி. இந்தப் பள்ளி தனது பள்ளி மாணவர்களுக்குக் கட்டண அடிப்படையில் சீருடை வழங்கி இருக்கிறது. இரண்டு மாணவிகள் சீருடைக்குப் பணம் செலுத்தாததால் அவர்களின் உடைகளைக் கழற்றி வாங்கிக்கொண்டு வீட்டுக்கு அனுப்பியிருக்கிறது பள்ளி நிர்வாகம். இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை (16.06.2017) நடந்திருக்கிறது.
பாதிக்கப்பட்ட இரண்டு மாணவிகளும் சகோதரிகள். ஒருவர் முதல் வகுப்பிலும், மற்றொரு மாணவி இரண்டாம் வகுப்பிலும் படிக்கிறார்கள். இவர்களது தந்தை சாஞ்சன் சாஹ் வெள்ளிக்கிழமை மகள்களை அழைக்க பள்ளிக்குச் சென்றிருக்கிறார். வகுப்பு ஆசிரியையோ, உடனடியாகச் சீருடைக்கான பணத்தைச் செலுத்திவிட்டு மகள்களை அழைத்துச் செல்லும்படி சொல்லியிருக்கிறார். சாஹ் இரண்டு பெண் குழந்தைகளின் சீருடைக்கான பணம் செலுத்துவதற்கு கொஞ்சக் காலம் அவகாசம் கேட்டிருக்கிறார். ஆனால், அவரது கண் முன்னாலேயே, அனைத்து ஆசிரியர்களுக்கும் மத்தியில் இரண்டு பெண் குழந்தைகளின் ஆடைகளையும் களைந்து வீட்டுக்கு அனுப்பியிருக்கிறார்கள்.
சாஹ், வழி தெரியாமல் காவல் நிலையத்தை நாடியிருக்கிறார். இவரது கதறலில் காவல்துறை பள்ளியின் மீது வழக்குப் பதிவு செய்து முதல் தகவல் அறிக்கையைத் தாக்கல் செய்திருக்கிறது. 'இந்தச் சம்பவத்தின் அடிப்படையில் பள்ளியின் முதல்வரையும், வகுப்பு ஆசிரியையும் கைது செய்து இருக்கிறோம்' என்கிறார் காவல் துறை அதிகாரி ராஜேஷ்குமார். மாநில கல்வி அமைச்சர் அஷோக் சௌத்ரி 'இந்தச் சம்பவத்தை உடனடியாக விசாரித்து பள்ளியின் மீதும், சம்பந்தப்பட்டவர்களின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கூறி இருக்கிறார்.
நாடு கல்வியில் முன்னேறி என்ன பயன்... கல்வி நிறுவனங்களும், ஆசிரியர்களும் மாற வேண்டாமா?

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.