Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 5, 2017

கால்நடை மருத்துவ படிப்பு முதல் கட்ட கலந்தாய்விற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி...!


2017-2018ம் ஆண்டு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் உள்ள இளநில பட்டப்படிப்புகளுக்கான 380 இடங்களுக்கு பிளஸ்2 மதிப்பெண் அடிப்டையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

இந்த படிப்புகளுக்கு www.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கான நடை முறை மே 15 முதல் தொடங்கியுள்ளது. மே 31ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன் பிறகு 5 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டது. இன்றோடு அந்த கால அவகாசம் முடிவடைகிறது.

விண்ணப்பங்ளை சமர்ப்பிக்க ஜூன் 12 கடைசி நாள்
இணையதளத்தில் பதிவு செய்த விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, தலைவர் சேர்க்கைக்குழு (இளநிலை பட்டப்படிப்பு) தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், மாதவரம் பால்பண்ணை, சென்னை 51 என்ற முகவரிக்கு ஜூன் மாதம் 7ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜூன் 12ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என கால அவகாசம் நீட்டித்து வழங்கப்பட்டுள்ளது.

கூடுதல் மாணவர் சேர்க்கை
ஜூன் மாதம் 30ந் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பபடும். முதல் கட்ட கலந்தாய்வு ஜூலை மாதம் 19, 20 மற்றும் 21ந் தேதி நடைபெறும். இந்த கல்வி ஆண்டில், சென்னை, நெல்லை ஒரத்தநாடு ஆகிய இடங்களில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரிகளில் தலா 20 இடங்களும், ஒசூர் கோழியின் உற்பத்தி மற்றும் மேலாண்மை கல்லூரியில் 20 இடங்களும் என மொத்தம் 80 இடங்களுக்கு தமிழக அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தால் இந்த கல்வியாண்டிலேயே கூடுதல் இடங்களுக்கும் மாணவர் சேர்கை நடைபெறும்.

புதிய பாடத்திட்டம்
கால்நடை மருத்துவ அறிவியல் படிப்புக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன்படி கால்நடை மருத்துவ அறிவியல் படிப்புக்கான காலம் கூடுதலாக 6 மாதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

6 மாத காலம் அதிகரிப்பு
இதுவரை 5 வருடம் இருந்த கால்நடை மருத்துவப் படிப்பு வருகிற கல்வியாண்டு முதல் 5 1/2 ஆண்டாக மாறுகிறது. இதனை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் திலகர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.