Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 12, 2017

நான் வீழ்வேனென்று நினைத்தாயோ…! வீழ்த்திட்டாங்களே பாரதி: தமிழர்களை அவமானப்படுத்திய கர்நாடகா..!


தேடிச் சோறு நிதந் தின்று — பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி — மனம்
வாடித் துன்பமிக உழன்று — பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து — நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி — கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் — பல
வேடிக்கை மனிதரைப் போலே — நான்
வீழ்வே னன்றுநினைத் தாயோ?
என்றான் தமிழாய்ந்த கவிஞன் பாரதி.
இன்று அபோற்பட்ட கவிஞனுக்கு நிகழ்ந்த சோகத்தை எங்கே சொல்லி அழுவது.
பொதுவாக கழிவறைகளின் முகப்பில் இன்னாருக்கு இன்ன கழிப்பறை என்று தெரிந்து கொள்ள முகப்பில் ஆணின் படத்தையும், பெண்ணின் படத்தையும் இடம்பெறச் செய்வார்கள்.
வழக்கமாக கேலி சித்திர வடிவிலோ அல்லது வரைபடங்களவோ மட்டும் தான் மனிதர்களின் உருவம் வரையப்பட்டிருக்கும்.
கர்நாடகாவில் உள்ள ஒரு கழிவறையில் இடம்பெற்றுள்ள ஒரு உருவம் தமிழர்களை கொதிப்படைய செய்துள்ளது.
ஆண்களுக்கான கழிவறை முகப்பில் பாரதி தலையில் தலைப்பாகை உடன் இருப்பது போல காணப்படுகிறது.
இருபதாம் நூற்றாண்டின் தமிழ் வளர்ச்சிக்கு வித்திட்ட ஒரு தமிழ் கவிஞரை இப்படி கழிப்பறையில்  முன்பக்கம் இடம்பெறச்செய்தது யார் என இன்னும் அறியப்படவில்லை.
இது தற்செயலாக நடந்தாக இருக்கலாம், அல்லது வேண்டுமென்றே நடந்ததாக கூட இருக்கலாம்.
ஆனால் ஒரு காலும் இது போன்ற செயல்களால் தமிழ் வீழ்ந்து விடாது 1700 மொழிகளுக்கு வேர்ச்சொல்லையும், 180 மொழிகளுக்கு உறவு பெயர்களையும் கொடுத்த தமிழ் என்றும் மாய்ந்து விடாது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.