Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 16, 2017

ஆண்களின் கருவளத்தை அதிகரிக்க டிப்ஸ் ; தந்தையாக விருப்பமா ?


பெண் மட்டும் குழந்தை பிறக்க முழுமையான காரணமாக இருப்பதில்லை. ஒரு ஆரோக்கியமான குழந்தையை பெற ஆண்களும் ஆரோக்கியமாக இருப்பது அவசியம். ஆண்களின் உயிரணுக்கள் பெண்ணின் கருமுட்டையை அடையும் அளவிற்கு சக்தி வாய்ந்ததாக இருக்க வேண்டியது அவசியமாகும்.

எனவே பெண்கள் மட்டுமில்லாமல், ஆண்களும் ஆரோக்கியமான மகிழ்ச்சியான வாழ்க்கை முறையை கடைபிடிக்க வேண்டியது அவசியம்.

1. பெண்கள் சரியான உடல் எடையுடன் இருந்தாலும், ஆண்கள் அதிக உடல் எடையுடன் இருந்தால் கருத்தரிக்கும் வாய்ப்பு குறைவாக இருக்கும். உடல் எடை அதிகமாக உள்ள ஆண்களின் விந்துணுக்களின் சக்தி குறைவாக இருக்கும். எனவே உயரத்திற்கேற்ற உடல் எடையை வைத்துக்கொள்ளுங்கள்.

2. சில ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அதாவது இரத்த அழுத்தம் மற்றும் இரத்த சக்கரையின் அளவுகளை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம். இவை கருவுருதலை பாதிக்கலாம். கேன்சருக்காக எடுத்துக்கொள்ளும் சில மருந்துகளும் நிரந்தர கருவுறாமை பிரச்சனையை உருவாக்கும். எனவே ஆண்களின் கருவுறும் தன்மையை பாதிக்காத மருந்துகளை பரிந்துரைக்குமாறு மருத்துவரை கேட்கலாம்.

3. உடற்பயிற்சி செய்வது ஆண்களின் மனநிலையை சமநிலையில் வைக்கவும், மன அழுத்தத்தில் இருந்து விடுபடவும் உதவியாக இருக்கிறது. அதுமட்டுமின்றி உடற்பயிற்சி ஆண்கள் நீண்ட நாள் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.

பைக் ரைடர்களுக்கு நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதன் காரணமாக கருவுறும் தன்மை குறைகிறது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தினமும் ஐந்து மணிநேரம் பைக் ரைட்டிங் மற்றும் சைக்கிளிங் செய்பவர்களுக்கு கருவுறும் தன்மை குறைகிறது என ஆராய்சிகள் கூறுகின்றன.

4. ஆண்கள்  தினசரி அனைத்து விட்டமின்களும் நிறைந்த உணவுகளை உண்பதால் விந்தணுக்களின் ஆரோக்கியம் மேம்படுகிறது. ஆண்டிஆக்சிடண்டுகள், விட்டமின் சி, விட்டமின் ஈ, ஜிங்க், மினரல்கள் போன்றவை விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்துகிறது.

5. பெண்களை போலவே ஆண்களுக்கும் குறிப்பிட்ட வயதிற்கு மேல் கருவுறும் தன்மை குறைகிறது. விந்தணுக்களின் சக்தி குறைவாதாக ஆய்வுகள் கூறுகின்றன.

6. புகைப்பிடித்தல் மது அருந்துதல் ஆகியவை விந்தணுக்களின் ஆரோக்கியத்தை பாதிக்கின்றன. இந்த பிரச்சனை கொண்டவர்களின் உயிரணுக்கள் பெண்களின் கருமுட்டை வரை சென்றடைவதில்லை.

7. சூடான நீரில் குளிப்பது, பாத் டப்களில் சூடான நிரை நிரப்பி குளிப்பது ஆகியவை விந்தணுக்களின் ஆயுளை குறைக்கும்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.