Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 28, 2017

இரவே அமெரிக்கா கிளம்புகிறார் ரஜினி திடீர் உடல்நலக்குறைவு ?


மருத்துவ பரிசோதனைக்காக நடிகர் ரஜினிகாந்த், இன்று இரவு 10 மணிக்கு மும்பையிலிருந்து அமெரிக்கா கிளம்புகிறார்.

பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் 'காலா' படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் மும்பையில் தொடங்கியது. அங்கு தொடர்ந்து 10 நாட்கள் தங்கி படப்பிடிப்பில் கலந்துகொண்ட ரஜினி, பின்னர் சென்னை திரும்பினார். அப்போது தமிழக விவசாய அமைப்பினர், அரசியல் கட்சியினர், அரசியல் பார்வையாளர்கள் என பலரையும் சந்தித்தார்.

இதனைத் தொடர்ந்து காலா படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு மும்பையில் சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. இதில் ரஜினிகாந்த் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் படப்பிடிப்பில் பங்கேற்று வரும் ரஜினிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே மும்பையில் இருந்து இன்றிரவே அவர் அமெரிக்கா செல்கிறார்.

சில தினங்கள் அங்கு தங்கி மருத்துவ பரிசோதனை செய்துகொள்கிறார். மேலும் அமெரி்க்காவில் நடைபெற உள்ள 2.0 படவிழாவிலும் ரஜினி பங்கேற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதை முடித்துக்கொண்டு மீண்டும் ஜூலை 2வது வாரத்தில் அவர் சென்னை திரும்புவதாக கூறப்படுகிறது.

சென்னை திரும்பியதும் அரசியல் கட்சி தொடர்பான ஆலோசனைகளை நடத்துகிறார். ஆகஸ்ட் மாதம் முதல்வாரத்தில் சென்னையில் நடைபெறும் காலா படப்பிடிப்பில் அவர் பங்கேற்கிறார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.