June 14, 2017
முடிந்தது தடைக்காலம்... மீன்பிடிக்கத் தயாராகும் மீனவர்கள்
மீன்பிடித் தடைக்காலம் முடிந்துவிட்டதால், ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்குள் செல்ல உற்சாகமாகத் தயாராகிவருகின்றனர்.
வங்கக் கடலில், மீன்களின் இனப்பெருக்கத்துக்காக மீன்பிடித் தடைக்காலம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஏப்ரல் 15 முதல் மே 30 வரை மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்தத் தடையை, கடந்த ஆண்டு மத்திய அரசு 60 நாளாக உயர்த்தியது. அதன்படி ஜூன் 14 வரை மீன்பிடித் தடைக்காலம் நீட்டிக்கப்பட்டது. இதற்காக, மீனவர்களுக்கு நிவாரணத் தொகையாக ரூபாய் 5,000 வழங்கப்படுகிறது.
இன்றோடு மீன்பிடித் தடைக்காலம் முடிவடைவதால், ராமேஸ்வரம் கடற்கரைப் பகுதி பரபரப்பாகக் காணப்படுகிறது. 61 நாள்கள் கழித்து, இன்று கடலுக்குள் செல்ல டீசல், வலைகள், ஐஸ் பாக்ஸ் உள்ளிட்டவற்றை மீனவர்கள் படகில் ஏற்றிவருகின்றனர். இன்று மதியம் அவர்கள் கடலுக்குச் செல்வார்கள் எனக் கூறப்படுகிறது
முடிந்தது தடைக்காலம்... மீன்பிடிக்கத் தயாராகும் மீனவர்கள்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
June 14, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
June 14, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.