June 12, 2017
பணி ஓய்வு பெற்றார் நீதிபதி கர்ணன்: தீவிரப்படுத்தப்படுகிறதா தேடுதல் வேட்டை?
உச்சநீதிமன்றத்தால் தண்டனை அறிவிக்கப்பட்டு தலைமறைவாக இருந்துவரும் நீதிபதி கர்ணனின் பதவிக்காலம் இன்றோடு நிறைவு பெறுகிறது.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிகளால், 'நீதிமன்ற அவமதிப்பு' வழக்கில் தண்டனைபெற்று தலைமறைவாக உள்ளவர் நீதிபதி கர்ணன். தமிழகத்தைச் சேர்ந்த இவர், கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பதவி வகித்துவந்தார். சில மாதங்களுக்கு முன்னர், தன் சக் நீதிபதிகள் மீது ஊழல் புகார் தெரிவித்திருந்தார். இதையொட்டி, உச்சநீதிமன்றத்தின் தன்னார்வ விசாரணையில் இறுதியாக நீதிபதி கர்ணன் மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கே தண்டனை விதித்த நீதிபதி கர்ணன் மீது அடுக்கடுக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதையொட்டி, உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த கர்ணன், தன் பதவிக்காலத்திலேயே தலைமறைவானார். சுமார் ஒரு மாத காலம் தலைமறைவாக வாழ்ந்துவரும் நீதிபதி கர்ணனின் பதவிக்காலம் இன்றோடு நிறைவுறுகிறது.
இதையடுத்து, முடங்கிக்கிடந்த நீதிபதி கர்ணனைத் தேடும் பணி, மீண்டும் முடுக்கிவிடப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்து வருவதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன. உச்சநீதிமன்ற நீதிபதிகளால் சிறைத்தண்டனை பெற்ற முதல் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமறைவாக இருக்கும்போது, பணி ஓய்வு பெற்ற நீதிபதி எனப் பல பெயர்கள் நீதிபதி கர்ணனுக்கு கிடைத்துள்ளது.
பணி ஓய்வு பெற்றார் நீதிபதி கர்ணன்: தீவிரப்படுத்தப்படுகிறதா தேடுதல் வேட்டை?
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
June 12, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
June 12, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.