புனேவை சேர்ந்தவர் சாகர் கிருஷ்ணா என்பவருக்கும் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துவரும் மாணவிக்கும் நட்பு ஏற்பட்டது. இருவரும் சாட்டிங் செய்து பழகி வந்த நிலையில், ஒருவருக்கு ஒருவர் செல்போன் எண்ணைப் பரிமாறிக்கொண்டனர்.
பின்னர் இருவரும் நட்பாகப் பழகி வந்துள்ளனர். பிறகு இருவரும் நேரில் சந்தித்து பேசும் அளவுக்குப் பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 6 மாதகாலமாக ஒரு தலையாக சாகர் கிருஷ்ணா அந்தக் கல்லூரி மாணவியைக் காதலிக்க துவங்கியுள்ளார்.
இதனை அந்தப் பெண்ணிடம் மறைமுகமாகத் தெரியவும் படுத்தியுள்ளார். ஆனால் அவர் தனக்கு காதல் என்பது சுத்தமாக பிடிக்காது, அந்த எண்ணத்தில் என்னுடன் பழகினால் நமது நட்பை நிறுத்திக் கொள்ளலாம் என்று கூட தெரிவித்தாராம். பின்னர் சாகர் கிருஷ்ணா அந்தர் பல்டி அடித்து நானும் அப்படி நினைக்கவில்லை. தங்களுடன் நட்பாகத்தான் பழகுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் சில தினங்ளுக்கு முன்னர் சாகர் கிருஷ்ணா யதார்த்தமாகக் கல்லூரி வாசலில் பார்ப்பது போன்று சந்தித்துள்ளார். அப்போது அந்தப் பெண்ணிற்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தைக் கொடுத்து குடிக்க வைத்துள்ளார்.
அந்தக் குளிர்பானத்தை குடித்த அந்த மாணவி மயங்கிவிட்டார். பின்னர் அவரை காரில் கடத்திச் சென்று மறைவான குடியிருப்பு பகுதியில் தங்க வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அவர் மயக்கம் தெளிந்த நிலையில் என்னையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று மிரட்டி திருமணத்தையும் அந்த வீட்டிலேயே முடித்துக் கொண்டார்.
சாகர் கிருஷ்ணாவுடன் மணக்கோலத்தில் வீட்டிற்கு வந்த அந்தப் பெண். தன் தோழியைப் பார்க்கப்போதாகக் கூறிக் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார் வழக்குப் பதிவு செய்து பேஸ்புக் மூலம் அறிமுகமாகி மாணவியின் வாழ்க்கையை அழித்த சாகர் கிருஷ்ணாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.