June 5, 2017
தற்கொலைக்கு நான் காரணமா? என்னிடம் பணம் பறிக்க சதி..! தங்கமகன் மாரியப்பன் குமுறல்..!
தான் மிரட்டியதால் சதீஷ்குமார் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறி தன்னிடம் பணம் பறிக்க முயல்வதாக தங்கமகன் மாரியப்பன் குற்றம்சாட்டியுள்ளார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற மாரியப்பன் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பெரியவடகம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்.
கடந்த 2 நாட்களுக்கு முன் அதே ஊரை சேர்ந்த சதீஷ்குமார் என்ற இளைஞர் சென்ற இருசக்கர வாகனம் மாரியப்பனின் கார் மீது மோதியதில் மாரியப்பனின் கார் சேதமடைந்தது.
இதுகுறித்து சதீஷ்குமாரின் வீட்டில் மாரியப்பன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், நேற்று இரவு சதீஷ்குமாரின் வீட்டருகே உள்ள தண்டவாளத்தில் சதீஷ்குமார் சடலமாக மீட்கப்பட்டார்.
காருக்கு ஏற்பட்ட சேதத்திற்கு பணம் கேட்டு மாரியப்பன் மிரட்டியதாகவும் அவரது நண்பர்கள், சதீஷ்குமாரின் செல்போனை பறித்துச் சென்றதாகவும் தொடர்ச்சியாக பணம் கேட்டு மாரியப்பனும் அவரது நண்பர்களும் மிரட்டியதால்தான் சதீஷ்குமார் தற்கொலை செய்துகொண்டதாக சதீஷ்குமாரின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
தன் கார் மீது மோதிய போது சதீஷ்குமார் மது போதையில் இருந்ததாகவும் தான் மிரட்டியதால் சதீஷ்குமார் தற்கொலை செய்துகொண்டார் என்றுகூறி தன்னிடம் இருந்து பணம் பறிக்க முயற்சி செய்வதாகவும் மாரியப்பன் குற்றம்சாட்டியுள்ளார்.
தற்கொலைக்கு நான் காரணமா? என்னிடம் பணம் பறிக்க சதி..! தங்கமகன் மாரியப்பன் குமுறல்..!
Reviewed by மறத்தமிழன்
on
June 05, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
June 05, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.