Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 7, 2017

கனடாவில் 8 முதியவர்களை கொலை செய்த செவிலியருக்கு ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்பு!


கனடா நாட்டில் 8 முதியவர்களை கொலை செய்த குற்றத்திற்காக செவிலியப் பெண் ஒருவருக்கு ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் Elizabeth Wettlaufer(49) என்பவர் செவிலியராக பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில், இவர் கடுமையான மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து தனது கண்காணிப்பிற்கு வரும் நோயாளிகளிடம் மோசமாக நடந்து கொண்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் வயது மூத்த நோயாளிகளை ஒன்றன் பின் ஒன்றாக கொலை செய்யவும் முடிவு செய்து அதற்கான பணியில் இறங்கியுள்ளார்.
2007 மற்றும் 2014 ஆகிய காலக்கட்டங்களில் இவரது கண்காணிப்பிற்கு வந்த 8 நோயாளிகள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்.
ஆனால், அப்போது செவிலியர் மீது சந்தேகம் ஏற்படவில்லை. கடந்தாண்டு மருந்தகம் ஒன்றிற்கு சென்ற அப்பெண் தனது முந்திய நடவடிக்கைகளை எடுத்துக் கூறியுள்ளார்.
இவ்விவகாரம் வெளியானதை தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்டார்.
இவ்வழக்கு தொடர்பான விசாரணை நேற்று முன் தினம் நீதிமன்றத்திற்கு வந்தபோது செவிலியர் அனைத்துக் குற்றங்களையும் ஒப்புக்கொண்டுள்ளார்.
மேலும், கொலையாளி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதால் அவருக்கு 25 ஆண்டுகள் வரை வெளியே வர முடியாத ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.