June 14, 2017
குழந்தையைக் காட்டி தினமும் 8000 சம்பாதிக்கும் பெண்..!
தொழில் விசயம் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் போது ஒருதாயினால் வளர்க்குமாறு ஒப்படைக்கப்பட்ட மூன்று வயதான ஆண் குழந்தையை காட்டி பிச்சை எடுத்த பெண்ணொருவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இலங்கை புறக்கோட்டையில் பிச்சை எடுத்து கொண்டிருந்த பெண்ணை, சிறுவர் மற்றும் பெண்கள் சீரழிவிற்கு உள்ளாவதை தடுக்கும் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் வெல்லம்பிட்டி பிரதேசத்தை சேர்ந்தவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிச்சை எடுக்கும் போது தன்னுடன் இருந்த குழந்தை தன்னுடையது என பெண் கூறியுள்ளார்.
மேலும் அந்த பெண்ணிடம் விசாரித்த போது கணவன் கைவிட்டு சென்ற காரணத்தினால்,
தனது தங்கை குழந்தையை தன்னிடம் ஒப்படைத்து விட்டு வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்று விட்டதாக பெண் பின்னர் அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.
தனது பிள்ளைகள் மற்றும் இந்த குழந்தையை பராமரிக்க முடியாத நிலைமையில் தான் பிச்சை எடுத்து பிள்ளைகளை பராமரித்து வருவதாக பெண் கூறியுள்ளார்.
குழந்தையை காட்டி தான் தினமும் 8 ஆயிரம் ரூபா சம்பாதித்து வருவதாகவும் பெண் குறிப்பிட்டுள்ளார்.
குழந்தையைக் காட்டி தினமும் 8000 சம்பாதிக்கும் பெண்..!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
June 14, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
June 14, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.