Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 20, 2017

கருணைக்கொலை செய்துவிடுங்கள்! 70 வயது மூதாட்டி கலெக்டரிடம் மனு




கருணைக்கொலை செய்துவிடுங்கள்! 70 வயது மூதாட்டி கலெக்டரிடம் மனு
'இந்தியாவில் 44 சதவிகித முதியோர்கள் பொது இடங்களில் இழிவுபடுத்தப்படுகின்றனர்' என்று சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ராஜீவ் காந்தி மருத்துவமனை டீன் நாராயணன், சமீபத்தில் நடந்த ஒரு கருத்தரங்கில் கூறினார். முதுமை என்பது பொது இடங்களில் மட்டுமல்ல குடும்பங்களிலும் நிராகரிக்கப்பட்டேவருகிறது. இவர்களால் வளர்க்கப்பட்ட குழந்தைகள், முதுமையை எட்டும் உறவுகளைக் கைவிடும் சம்பவங்கள் தினமும் அரங்கேறிவருகின்றன.
கணவரிடமிருந்து ஜீவனாம்சம் கிடைக்காததால், விருதுநகரைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி ராக்கம்மாள், தன்னை கருணைக்கொலை செய்துவிடும்படி மாவட்டக் கலெக்டரை நேரில் சந்தித்து மனு கொடுத்துள்ளார். இவரது கணவர், மின்சார வாரியத்தில் வேலைபார்த்து ஓய்வுபெற்றுள்ளார். ராக்கம்மாள், 2015ஆம் ஆண்டில் சிவகாசி நீதிமன்றத்தில் ஜீவனாம்சம் கேட்டு வழக்குத் தொடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், '2017 ஜனவரி முதல் மாதந்தோறும் 5 ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சமாக வழங்க வேண்டும்' என்று உத்தரவிட்டுள்ளது. ஆனால், இன்றுவரை ஜீவனாம்சம் வரவில்லை என்பது ராக்கம்மாளின் ஏக்கமாக உள்ளது.
கணவரும் குழந்தைகளும் கைவிட்ட நிலையில் வாழ வாழியின்றி, மூதாட்டி தன்னைக் கருணைக்கொலை செய்துவிடும்படி கூறுவது வேதனை அளிக்கிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.