Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 16, 2017

டார்ஜிலிங்கில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு : கூர்காலாந்து தனிமாநிலம் கோரி 5-வது நாளாக நீடிக்கும் போராட்டம் !


டார்ஜிலிங்: தனி மாநிலம் கோரி கூர்கா ஜனமுக்தி மோர்சா அமைப்பினர் நடத்தி வரும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன.

இதற்காக அந்த அமைப்பின் தலைவர்களுடன் மத்திய அரசு மற்றும் மேற்குவங்க அரசு அதிகாரிகள் வரும் திங்கட்கிழமையன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இதனிடையே கூர்கா ஜனமுக்தி மோர்சா அமைப்பினர் நடத்தி வரும் காலவரையற்ற வேலைநிறுத்தம் 5-வது நாளாக இன்றும் நீடிக்கிறது. இதனால் மலைவாழ் இடமான டார்ஜிலிங்கில் சுற்றுலாப் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து பேசிய சுற்றுலா பயணிகள், முழுஅடைப்பு போராட்டம் காரணமாக வாகனங்கள் கிடைக்கவில்லை. இதனால் ஊர்திரும்ப முடியாமல் கடந்த 2 நாட்களாக டார்ஜிலிங்கிலேயே தங்கியுள்ளதாக குறிப்பிட்டனர். மேற்குவங்கத்தை பிரித்து டார்ஜிலிங்கை தலைமையிடமாக கொண்டு தனி மாநிலத்தை உருவாக்க வேண்டும்,

தங்கள் மீது வங்கமொழியை திணிக்க கூடாது என்று கூறி கூர்கா ஜனமுக்தி மோர்சா அமைப்பினர், கடந்த திங்கட்கிழமை முதல் காலவரையற்ற முழுஅடைப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். கல்வீச்சு, தீ வைப்பு, வாகனங்கள் எரிப்பு என்று பெரும் வன்முறையாக மாறியிருப்பதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. மத்திய துணை ராணுவப் படையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.  மேலும் கூடுதல் துணை ராணுவப் படையினரை அனுப்பி வைக்கும் படி மம்தா அரசு, மத்திய அரசிடம் கோரியுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.