Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 8, 2017

பரபரப்பான அரசியல் சூழல்: 5-வது முறையாகக் கூடுகிறது தமிழக அமைச்சரவை!


தமிழக அமைச்சரவைக்கூட்டம், இன்று பிற்பகல் 3 மணி அளவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூடுகிறது.
தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு அமைந்து 100 நாள்களுக்கு மேல் ஆகிவிட்டது. இதுநாள் வரை பரபரப்பு இல்லாமல் இருந்துவந்த தமிழக அரசியல், டி.டி.வி.தினகரன் ஜாமீனுக்குப் பின் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தினகரனின் ஆதரவு எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கை அதிகரிப்பது ஒரு பக்கம், இரு அணிகள் இணைப்பு ஒரு பக்கம் என தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவிவருகிறது.
இந்நிலையில், முதல்வர் பழனிசாமி தலைமையில் இன்று 3 மணியளவில் அமைச்சரவை கூடுகிறது என அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதற்கிடையே, நேற்று சட்டசபைக் கூட்டத்தொடர் ஜூன் 14 ஆம் தேதி முதல் ஜூலை 19 ஆம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் தனபால் அறிவித்தார். அதனால், இன்று துவங்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் பேரவைக்கூட்டம் தொடர்பாக விவாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. மேலும், விரைவில் அமலுக்கு வரவிருக்கும் ஜிஎஸ்டி மசோதாகுறித்தும் இன்று விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.