June 15, 2017
சந்தி சிரிக்கும் அதிமுக : டிவி விவாததில் ஒரே கட்சியை சேர்ந்த 4 பேர் பங்கேற்று விவாதம்!
செய்தி தொலைக்காட்சி விவாதங்களில் 4 கட்சியைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்ட காலம் போய் தற்போது ஒரே கட்சியை சேர்ந்த 4 பேர் கலந்து கொண்டது குறித்து டுவிட்டரில் கிண்டல் அடித்து வருகின்றனர்.
முன்பெல்லாம் நாட்டில் நடைபெறும் எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் மறுநாள்தான் செய்தித்தாள்களில் வெளியாகும் இதன் மூலமே மக்கள் அறிந்துவந்தனர்.
ஆனால் தற்போது தொலைக்காட்சியின் 24 மணி நேர செய்தி சேனல்கள் வந்தவுடன் செய்திகள் உடனுக்குடன் மக்களை சென்றடைந்தன.
இதன்மூலம் தற்போது நாட்டில் நடைபெறும் எந்த பிரச்சினையாக இருந்தாலும் அது நடந்த அடுத்த நிமிடமே டிவிகளில் விவாதப் பொருளாகி வருகின்றன. இதில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, நெறியாளர், பொதுவானவர், அரசியல் விமர்சகர் உள்ளிட்டோர் இருப்பர்.
அரசு கொண்டுவரும் திட்டத்தை பற்றி விவாதிக்கும் போது, ஆளும் கட்சி கொண்டு வந்த திட்டங்கள் குறித்து ஆளும் கட்சி நபரும், அதில் உள்ள பாதகங்கள் குறித்து எதிர்க்கட்சியை சேர்ந்த நபரும், இரண்டுக்கும் பொதுவான உள்ள கருத்துகளை குறித்து நடுநிலைவாதியும் எடுத்துரைப்பர்.
முன்னாள் முதலமைச்சர் ஜெ., இறந்த பிறகு அதிமுகவில் பல பிரிவுகளாக பிளவுபட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கும் அவல நிலைக்கு ஆளுகின்ற கட்சி தள்ளப்பட்டுள்ளது. அனைவரையும் ஆச்சரியத்துடன் பார்க்கும் நிலைமைக்கு வந்துள்ளது.
இந்நிலையில், நேற்று இரவு தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாதங்களில் ஒரே கட்சியை சேர்ந்த 4 பேர் பங்கேற்று உட்கட்சி பிரச்சனையை விவாதித்துக் கொண்டிருந்தனர்.
இந்தச் சம்பவம் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது. குறிப்பாகச் சமூக வலைத்தளங்களில் அதிமுகவை கிழித்து வறுத்தெடுத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
ஜெ., இருந்திருந்தால் இது போன்ற நிலைமை அதிமுகவுக்கு வந்திருக்காது என்று அக்கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
சந்தி சிரிக்கும் அதிமுக : டிவி விவாததில் ஒரே கட்சியை சேர்ந்த 4 பேர் பங்கேற்று விவாதம்!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
June 15, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
June 15, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.