Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 2, 2017

உலக நாடுகளை அச்சுறுத்தும் எஸ்-400 ஏவுகணை: இந்தியாவுக்கு வழங்க ரஷ்யா ஒப்புதல்


உலக நாடுகளை அச்சுறுத்தும் எஸ்-400 ஏவுகணையை இந்தியாவுக்கு வழங்க ரஷ்யா சம்மதம் தெரிவித்துள்ளது. இந்திய ராணுவத்துக்கு வலுசேர்க்கும் விதமாக இந்த அதிநவீன எஸ்-400 ரக ஏவுகணையை இந்தியாவுக்காக வழங்க ரஷ்யா முடிவெடுத்துள்ளது. மேலும் இரு நாட்டுப் பிரதிநிதிகளும் இதுகுறித்த பேச்சுவார்த்தையில் தற்போது ஈடுபட்டுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறைப் பயணமாக ரஷ்யா சென்றுள்ளார். மேலும் ரஷ்ய அதிபர் புதினை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

இந்நிலையில் இரு நாட்டின் நலனையும் கருத்தில்கொண்டு, 12 ஒப்பந்தங்களில் இந்தியா- ரஷ்யா இடையே கையெழுத்தானது. இந்த ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளின் இறுதியில் இந்தியாவுக்காக மிகவும் அதி நவீன எஸ்-400 ரக ஏவுகணையை வழங்கத் தயார் என ரஷ்யா அறிவித்துள்ளது. இதுதொடர்பான பேச்சுவார்த்தை வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, எஸ்-400 ரக ஏவுகணையின் தயாரிப்புப் பணிகள் நடைபெறத் தொடங்கிவிட்டன என்றும் இந்தியாவுக்கு அளிக்கும் நாள் குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் ரஷ்ய துணைப் பிரதமர் டிமிட்ரி ரோகோகோசின் அறிவித்துள்ளார்.

எஸ்-400 ரக ஏவுகணையின் சிறப்பம்சம்

இந்த எஸ்-400 ரக ஏவுகணை 400 கி.மீ தொலைவிலிருந்து தாக்க வரும் ஏவுகணை மற்றும் விமானங்களைக் கண்டறிந்து, தாக்கும் திறனுடையது.  மேலும் ஒரே நேரத்தில் 36 இலக்குகளைக் குறிவைத்துத் தாக்கும் சிறப்பையும் இந்த ஏவுகணை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.