Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 1, 2017

4 தளத்திற்கு மட்டுமே அனுமதி... சென்னை சில்க்ஸ் 8 தளம் கட்டி விதிமீறல்- அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்


சென்னை சில்க்ஸ் உரிமையாளர்கள் 4 தளத்திற்கு மட்டுமே சிஎம்டிஏவில் அனுமதி பெற்று விட்டு 8 தளங்களை விதிகளை மீறி கட்டியுள்ளதாக நகர்புற வீட்டு வசதித்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சென்னை சில்க்ஸ் ஜவுளிக்கடையில் நேற்று காலையில் ஏற்பட்ட தீ விபத்தினால் கட்டிடம் நொறுங்கி விழுந்து வருகிறது. இந்த விபத்து குறித்து அமைச்சர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர். தீ விபத்து காரணமாக கட்டிடம் மோசமாக வலு இழந்துள்ளதால்,கட்டிடத்தை முற்றிலும் இடித்துத் தள்ளுவது நல்லது என வல்லநர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.

இதனிடையே சென்னை சில்க்ஸ் கட்டிட தீ விபத்து குறித்தும் கட்டிடம் விதிகளை மீறி கட்டப்பட்டிருப்பது குறித்தும் நகர்புற வீட்டு வசதித்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.

விதி மீறிய சென்னை சில்க்ஸ்
சென்னை எழும்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய உடுமலை ராதாகிருஷ்ணன், சென்னை சில்க்ஸ் கட்டிடம் விதிகளை மீறி கட்டப்பட்டதுதான் என்றார். தரை தளம் தொடங்கி நான்கு தளங்களுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டது. அவர்கள் விதிகளை மீறி 7 தளங்கள் வரை கட்டியதால் அதை இடிப்பதற்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.

இடிக்க நோட்டீஸ்
2006ஆம் ஆண்டு கட்டிடத்தின் 5 முதல் 7வரை உள்ள தளங்கள் இடிக்கப்பட்டது. ஆனால் கட்டிட உரிமையாளர்கள் நீதிமன்றத்திற்கு சென்று தடையாணை பெற்று வந்ததால் கட்டிடம் இடிப்பு நிறுத்தப்பட்டது.

86 கட்டிடங்கள் விதிமீறல்
தி. நகரில் 86 கட்டிடங்கள் விதிமீறி கட்டப்பட்டிருந்தன. தி.நகரில் உள்ள விதிமீறல் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அழுத்தம் ஏற்பட்டதையடுத்து கடந்த 2011ஆம் ஆண்டு 25 பெரிய வணிக நிறுவன கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. இவற்றில் 6 கட்டிடங்களுக்கு சிஎம்டிஏ-வும் 19 கட்டிடங்களுக்கு மாநகராட்சியும் சீல் வைத்தது.

சீல் அகற்றம்
அவ்வாறு சீல் வைக்கப்பட்ட கட்டிடங்களில் தீ விபத்தில் சிக்கிய சென்னை சில்க்ஸ் கட்டிடமும் ஒன்று. சென்னை சில்க்ஸ் உள்ளிட்ட பல கடைகளின் உரிமையாளர்கள் ஒன்றாக சேர்ந்து நீதிமன்றம் சென்றதால், அனைவருக்கும் பொதுவான தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது. அந்த உத்தரவின்படி சீல் அகற்றப்பட்டது.

113 சி பிரிவு
சென்னையில் விதிமீறல் கட்டிடங்கள் குறித்து நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. அந்த குழு விதிமீறல் கட்டிடங்களை வரைமுறைப்படுத்தலாம் என பரிந்துரை செய்திருந்தது. அதன் பேரில் தமிழ்நாடு நகரமைப்பு சட்டத்தில் 113சி பிரிவை சேர்த்து, 2007 ஜூலை மாதத்துக்கு முன்னர் கட்டப்பட்ட விதிமீறல் கட்டிடங்களுக்கு சில விதிவிலக்குகளை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

நீதிமன்றம் அனுமதி
இந்த 113சி பிரிவு இன்னும் அமலுக்கு வரவில்லை. இதனை கருத்தில் கொண்டு, 113சி பிரிவு அமலுக்கு கொண்டுவரப்படும் வரை தி.நகர் கட்டிடங்கள் செயல்பட நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அதனால் அந்தப் பகுதியில் நடவடிக்கை எடுப்பதை நிறுத்தியுள்ளோம். 113சி பிரிவு அமலுக்கு வந்தாலும் குறிப்பிட்ட விதிமீறல்களுக்கு மட்டுமே விலக்கு அளிக்கப்படும்.

விதி விலக்குக்கு தகுதியற்றவை
தி.நகரில் உள்ள பெரும்பாலான கட்டிடங்கள் 113சி விதிவிலக்கு அளிக்கக்கூட தகுதியற்றவையே. 113சி பிரிவு நடைமுறைக்கு வந்தவுடன் முழுவீச்சில் நடவடிக்கைகள் தொடங்கப்படும். அடுத்த 2 மாதங்களுக்குள் 113சி பிரிவு நடை முறைக்கு வந்துவிடும் என அமைச்சர் ராதாகிருண்ணன் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.