Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 20, 2017

முதல்வர் எடப்பாடி மாட்டிறைச்சி விவகாரத்தை கண்டித்து 3 அதிமுக ஆதரவு எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு !


மாட்டிறைச்சி விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பதிலைக் கண்டித்து அதிமுகவின் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த தமிமூன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் ஆகியோர் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

சட்டசபையை கூட்டினால் நிச்சயம் களேபரங்கள் நடைபெறும்; ஆட்சியே கவிழும் அபாயம் உருவாகும் என தயங்கி வந்தார் முதல்வர் எடப்பாடி. ஆனால் கடும் நெருக்கடியால் வேறுவழியே இல்லாமல் சட்டசபையை கூட்டினார்.

தற்போது நடைபெற்று வரும் சட்டசபை கூட்டத் தொடரில் நேற்று முதல் ஆடுபுலி ஆட்டத்தை தொடங்கியுள்ளது தினகரன் கோஷ்டி. தமது தொகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கவில்லை என கூறி ஆளும் அரசைக் கண்டித்து அதிமுக எம்.எல்.ஏ. தங்க தமிழ்ச்செல்வன் வெளிநடப்பு செய்து சலசலப்பை ஏற்படுத்தினார்.

இன்று மாட்டிறைச்சி விவகாரத்தில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு எம்.எல்.ஏக்களான தமிமூன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் ஆகியோர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வெளிநடப்பு செய்தனர். மத்திய அரசின் மாட்டிறைச்சி தடை விவகாரத்தில் நீதிமன்றத்தின் முடிவுக்கு காத்திருக்கிறோம் என கூறினார் முதல்வர் எடப்பாடி.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பதிலைக் கண்டித்து முதலில் திமுக வெளிநடப்பு செய்தது. இதைத் தொடர்ந்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிமுக ஆதரவு எம்.எல்.ஏக்கள் தனியரசு, தமிமூன், கருணாஸ் ஆகியோர் வெளிநடப்பு செய்து பரபரப்பை கிளப்பினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் மாட்டிறைச்சி தடையை தமிழக அரசு கட்டாயம் எதிர்க்க வேண்டும் என தனியரசு, கருணாஸ், தமிமூன் அன்சாரி உள்ளிட்டோர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.