June 4, 2017
சூதாட்டத்தில் பணம் தோற்ற வெறியில் 36 பேரை சுட்டுக் கொன்ற கொடூரன்
பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரான மணிலாவில் உள்ள பிரபல சூதாட்ட விடுதியில் 36 பேரை ஈவிரக்கமின்றி சுட்டுக் கொன்ற நபரைப் பற்றிய பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது.
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள சூதாட்ட விடுதி ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டை அடுத்து ரெசார்ட்ஸ் வேர்ல்ட் மணிலா என்னும் அந்த சூதாட்ட விடுதி தற்காலிகமாக மூடப்படுவதாக அந்த நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் அறிவிக்கப்பட்டது.
தாக்குதலைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், குறிப்பிட்ட விடுதிக்கு சீல் வைத்ததுடன் அந்த பகுதிக்குள் வெளிநபர்கள் நுழையவும் தடை விதித்தனர். மேலும் அந்த விடுதியில் இருக்கும் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக பிலிப்பைன்ஸ் போலீசார் தெரிவித்துள்ளனர்.
முன்னர் வெளியான தகவலின்படி, ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் 'லோன்உல்ஃப்' என்னும் தற்கொலைப் படையினர் இந்த தாக்குதலை நடத்தியதாக கூறப்பட்டது. இந்த தாக்குதலில் 36 பேர் உயிரிழந்ததாகவும் அந்த விடுதியில் இருந்த பணத்தை கொள்ளையடிக்கும் நோக்கத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என போலீசார் முன்னர் தெரிவித்தனர்.
இந்த கொடூர தாக்குதல் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் 36 பேரை சுட்டுக் கொன்ற நபர் யார்? என்ற விபரத்தை மணிலா போலீசார் இன்று வெளியிட்டுள்ளனர்.
தாக்குதல் நடத்தியவரின் பெயர் ஜெசி கார்லோஸ் ஜேவியர்(42). பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர். அதே சூதாட்ட விடுதியின் நிரந்தர வாடிக்கையாளரான இவர் ஏற்கனவே பலமுறை இங்கு சூதாடி, ஏராளமான பணத்தை இழந்த வெறியில் இந்த கொலைவெறி தாண்டவத்தில் அவர் ஈடுபட்டதாக தற்போது தெரியவந்துள்ளது.
சூதாடுவதற்காக நிறைய பேரிடம் பெரும் தொகையை கடனாக பெற்று அதை திருப்பி செலுத்த முடியாத நிலையில் இந்த விபரீத முடிவில் அவர் இறங்கியதாக ஜெசி கார்லோஸ் ஜேவியர் குடும்பத்தினர் அளித்த வாக்குமூலத்தில் தெரியவந்துள்ளது.
எனவே, ரெசார்ட்ஸ் வேர்ல்ட் மணிலா சூதாட்ட விடுதியில் நடைபெற்ற தாக்குதல் தீவிரவாத தாக்குதல் அல்ல என மணிலா நகர காவல்துறை தலைவர் ஆஸ்கர் அல்பேயால்டே இன்று குறிப்பிட்டுள்ளார்.
சூதாட்டத்தில் பணம் தோற்ற வெறியில் 36 பேரை சுட்டுக் கொன்ற கொடூரன்
Reviewed by மறத்தமிழன்
on
June 04, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
June 04, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.