June 20, 2017
35 ஆயிரம் அடி உயர பறந்த விமானத்தில் பிறந்த குழந்தை.. பிறந்த நிமிடத்தில் அடித்தது ஜாக்பாட்!!
சவுதி அரேபியாவில் இருந்து கொச்சி நோக்கி சென்ற ஜெட் ஏர்வேஸ் விமானத்தில், நடுவானில் நிறைமாத கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்ததால் மும்பைக்கு அவசரமாக திருப்பி விடப்பட்டது.
ஜெட் ஏர்வேஸ் விமானம் ஒன்று சவுதி அரேபியாவின் தம்மாம் நகரில் இருந்து கொச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்த போதே, ஒரு பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது, மேலும் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
குழந்தை பிறந்ததும் அதன் தாய் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளார். அதேபோல், ஜெட் ஏர்வேஸ் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக விமானத்தில் பிறந்த அந்த குழந்தை தனது வாழ்நாள் முழுவதும் விமானத்தில் இலவசமாக செல்ல சலுகை அறிவித்துள்ளது.
162 பயணிகளுடன் சென்ற ஜெட் ஏர்வேஸின் போயிங்-737 விமானம் உடனடியாக மும்பைக்கு திருப்பி விடப்பட்டது.
விமான பயணிகளின் உதவியாலும், பயிற்சி பெற்ற துணை மருத்துவர் ஒருவர் இருந்ததால் 35 ஆயிரம் அடி உயரத்தில் வெற்றிகரமாக பிரசவம் பார்க்கப்பட்டது.
மும்பை விமானம் திரும்பியதும், குழந்தையும் தாயும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இருவரும் நலமுடன் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
35 ஆயிரம் அடி உயர பறந்த விமானத்தில் பிறந்த குழந்தை.. பிறந்த நிமிடத்தில் அடித்தது ஜாக்பாட்!!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
June 20, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
June 20, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.