Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 21, 2017

ஜூன் 30ஆம் தேதி நள்ளிரவில் அமலுக்கு வருகிறது ஜி.எஸ்.டி


இம்மாதம் 30 ஆம் தேதி நள்ளிரவு முதல் நாட்டில் சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜி.எஸ்.டி அமலுக்கு வரும் என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்துள்ளார்.
ஜூலை 1 ஆம் தேதி முதல் ஜி.எஸ்.டி வரி அமலுக்கு வரும் என்று முன்னரே மத்திய அரசு அறிவித்திருந்தது. அது தொடர்பான கூட்டம் இன்று டெல்லியில் நடந்தது. அதில் புதிய வரி அமலாவது குறித்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் நிதியமைச்சர் அருண் ஜெட்லி.
வரும் 30 ஆம் தேதி அன்று நாடாளுமன்றத்தின் மைய அரங்கில் இதற்கான கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் பிரதமர் மோடி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், தேவகௌடா உள்ளிட்டோர் கலந்துகொள்வார்கள் என்று நிதியமைச்சர் ஜெட்லி தெரிவித்தார்.
பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி பிரணாப் ஆகியோர் இந்த புதிய ஜி.எஸ்.டி வரி குறித்து பேசுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. தமிழக சட்டசபையில் ஜி.எஸ்.டி மசோதா நேற்று நிறைவேறியது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.