Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 30, 2017

கதிராமங்கலத்தில் போலீசார் - பொதுமக்கள் இடையே தள்ளுமுள்ளு : 2 போலீசார் காயம்


தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி., குழாயில் இன்று காலை எண்ணெய் கசிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். எண்ணெய் கசிவை சரி செய்ய சென்ற அதிகாரிகளை பொது மக்கள் தடுத்து நிறுத்தினர்.

இதனால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் இன்று மாலையில் அந்த எண்ணெய் குழாய் கசிவை பார்வையிட வந்த தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஷுடன் மக்கள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பின்னர் சாலையில் போடப்பட்டிருந்த தடுப்புகளுக்கு பொதுமக்கள் தீ வைத்தனர். இதனை தொடர்ந்து போலீசார் மீது கல்வீசப்பட்டது.

இதனையடுத்து போராட்டகாரர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இந்த கலவரத்தில் 2 போலீசார் காயமடைந்தனர். மேலும் பெண் ஒருவருக்கு மண்டை உடைந்தது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.