Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 16, 2017

மசாஜ் + பாகுபலி 2 பார்க்குறோம்.. அப்படியே "எஸ்கேப்" ஆகுறோம்.. குஜராத்தைச் சேர்ந்த பெண் சாமியார் !


சாமியார என்ற பெயரில் ஏகப்பட்ட சேட்டைகளைச் செய்து வந்த குஜராத்தைச் சேர்ந்த பெண் சாமியார் சாத்வி ஜெய்ஸ்ரீ கிரி, போலீஸாரிடமிருந்து படு நூதனமாக தப்பி ஓடியுள்ளார்.

வடக்கு குஜராத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டவர் ஜெயஸ்ரீ கிரி. சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரை மருத்துவப் பரிசோதனைக்காக கூட்டிச் சென்றபோது மருத்துவமனையிலிருந்து தப்பி விட்டார்.

பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டவர் கிரி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பெண் சாமியார் மருத்துவப் பரிசோதனைக்காக குறுகிய கால பரோலில் வெளியே வந்தார். வெளியே வந்தவருக்கு நான்கு போலீஸார் பாதுகாப்புக்காக போடப்பட்டனர். இவர்களை தனது வலையில் வீழ்த்தினார் சாமியார்.

மருத்துவப் பரிசோதனை என்று கூறிக் கொண்டு ஒரு ஸ்பாவுக்குப் போயுள்ளனர். அங்கு பெண் சாமியாருக்கு மசாஜ் கொடுக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து பாகுபலி 2 படம் பார்க்கப் போயுள்ளனர்.

அதன் பிறகு பெண் சாமியார் மெதுவாக எஸ்கேப் ஆகி விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்தனர் நான்கு போலீஸாரும். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸ் தற்போது இந்த நான்கு போலீஸாரையும், பெண் சாமியாரின் வக்கீலையும் கைது செய்துள்ளனர்.

பெண் சாமியார் ஜெயஸ்ரீக்கு சொந்தமாக கோவில் உள்ளது. டிரஸ்ட்டும் வைத்துள்ளார். நகைக் கடைக்காரரிடம் ரூ. 5 கோடி பணத்தை மோசடி செய்து விட்டு அவரிடம் மேலும் பணம் பறிக்கவும் முயற்சி செய்தபோதுதான் கைதானார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.