June 28, 2017
நகைக்கடையில் பிரேஸ்லெட்டை உடைத்த பெண்: ரூ.28 லட்சம் விலை என அறிந்ததும் அதிர்ச்சியில் மயக்கம் !
சீனாவின் யுன்னன் மாகாணத்தில் உள்ள நகைக்கடையில் ஒரு பெண் $44,110 (கிட்டத்தட்ட ரூ.28 லட்சம்) மதிப்புள்ள ஜேட் பிரேஸ்லெட்டை உடைத்துவிட்டார். தீய சக்திகள் இருந்து பாதுகாக்கவும், உடல் ஆரோக்கியத்துடன் இருக்கவும் ஜேட் பிரேஸ்லெட்டை சீனர்கள் அணிவது வழக்கம்.
அதனடிப்படையில் நகைக்கடையில் பெண் ஒருவர் ஜேட் பிரேஸ்லெட்டை எடுத்து பார்த்துக் கொண்டிருக்கும் போது, திடீரென கையில் இருந்து நழுவி கீழே விழுந்து உடைந்தது. பின்பு நகைக்கடை ஊழியர்கள், இதன் மதிப்பு 300,000 யுவான் என்ற அறிவித்தவுடன் அப்பெண் அதிர்ச்சியடைந்து மயக்கமடைந்தார்.
உடனே அப்பெண் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். விலையை கேட்டு அதிர்ச்சி அடைந்ததால் மயக்கமடைந்தார், தற்போது அவர் நலமாக உள்ளார் என்று கடையின் உரிமையாளர்கள் கூறியுள்ளார். கடை உரிமையாளர், அவரது நிதி நிலைமையை கருத்தில் கொண்டு இழப்பீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்த முயன்றார்.
இந்த பேச்சுவார்த்தைகளில் போலீஸ் ஈடுபடவில்லை. பேச்சுவார்த்தையின் போது அப்பெண்ணின் குடும்பத்தார், பிரெஸ்லெட்டிற்காக 70,000 யுவான் செலுத்த ஒப்புக்கொண்டனர்.
நகைக்கடையில் பிரேஸ்லெட்டை உடைத்த பெண்: ரூ.28 லட்சம் விலை என அறிந்ததும் அதிர்ச்சியில் மயக்கம் !
Reviewed by Admin
on
June 28, 2017
Rating: 5
Reviewed by Admin
on
June 28, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.