புதிதாக 200 ரூபாய் நோட்டுகளை அச்சிடும் பணியை ரிசர்வ் வங்கி தொடங்கியுள்ளது. விரைவில் புதிய 200 ரூபாய் தாள் புழக்கத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பணப்பரிவர்த்தனையில் நிலவி வரும் சிக்கல்களை களைந்து அதனை எளிமையாக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன் மத்திய அரசின் ஒப்புதலோடு புதிதாக 200 ரூபாய் நோட்டை புழக்கத்திற்கு கொண்டு வர முடிவு செய்து, அது தொடர்பாக மேற்குவங்க மாநிலத்தில் உள்ள ஆய்வகத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதாவது எதிர்காலத்தில் கள்ள 200 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் வந்தாலும், அதனை எளிமையாக கட்டுப்படுத்த இந்த புதிய 200 ரூபாய் தாளை எவ்வாறு பாதுகாப்பு அம்சங்களுடன் வடிவமைப்பது என்றும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து தற்போது ரிசா்வ் வங்கியின் ரூபாய் நோட்டு அச்சிடும் இடங்களான கர்நாடக மாநிலம் மைசூரு மற்றும் மேற்குவங்கத்தில் உள்ள சல்போனியில் 200 ரூபாய் தாள் அச்சிடும் பணியை ரிசர்வ் வங்கி துவக்கியுள்ளது. விரைவில் இந்த புதுய 200 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு விடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருப்பு பணம் மற்றும் ஊழலை ஒழிக்க கடந்த ஆண்டு இறுதியில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இதனை தொடர்ந்து புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டது. இதனால் தற்போது நிலவி வரும் சில்லரை தட்டுப்பாட்டை குறைக்க ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. அதேபோல 10, 20, 50, 100 ரூபாய் நோட்டுகளும், சில மாற்றங்களுடன் புதிய வடிவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் 1 ரூபாய் நோட்டும் புழக்கத்தில் விடப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது 200 ரூபாய் நோட்டை புழக்கத்தில் விட ரிசர்வ் வங்கி முடிவுசெய்துள்ளது. பரிவர்த்தனைகளை எளிதாக்கும் நோக்கில், 200 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.