June 2, 2017
சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை இடிக்கும் பணி தொடங்கியது: 20 அடி உயர மேடை அமைத்து ஜா கட்டர் !
தீ விபத்து ஏற்பட்ட தி.நகரில் இருக்கக்கூடிய சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை இடிக்கும் பணி தொடங்கியது. சென்னை சில்க்ஸ் கட்டடதில் 31ம் தேதி காலையில் தீ பிடித்தது. தொடர்ந்து 2 நாட்களாக தீயை அணைக்கும் பணி நடைபெற்றது. இந்நிலையில் தீ விபத்தினால் கட்டடம் உறுதி தன்மையை இழந்துள்ளதாக கட்டிட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் கட்டடத்தை இடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ராட்சத இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. 3 நாட்களில் கட்டிடத்தை இடிக்கும் பணி முடிவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 'ஜா கட்டர்' எனும் நவீன இயந்திரம் மூலம் இடிக்கும் பணி நடந்து வருகிறது.
சென்னை சில்க்ஸ் கட்டடம் மேலிருந்து கீழாக இடிக்கப்பட்டு வருகிறது. சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் பின்புறத்தில் மேடை அமைக்கப்பட்டு அதன் மேல் ஜா கட்டர் ஏறி கட்டடத்தை இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று முதலே அதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வந்த நிலையில், 150க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் கட்டட கழிவுகள் கொட்டப்பட்டு தற்காலிக மேடை அமைக்கப்பட்டது. 20 அடி உயரத்திற்கு மேடை அமைக்கப்பட்டு அதற்கு மேலே ஜா கட்டர் எனும் நவீன இயந்திரத்தை கொண்டு இடிக்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக ஜா கட்டர் கருவி மூலம் கட்டடம் வெட்டப்படுகிறது.
கட்டடம் வெட்டப்படுவதால் சுவர்கள் அனைத்தும் கட்டட உள்புறத்தில் விழுகிறது. சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் அருகில் இருக்கக்கூடிய கடைகளுக்கு எவ்வித சேதாரமும் இருக்கக்கூடாது என்பதற்காக இம்முறை கையாளப்பட்டுள்ளது. மேடை அமைக்கும் பணி தாமதமானதால் தான் கட்டடத்தை இடிக்கும் பணியில் தோய்வு அடைந்திருந்தது. தற்போது அந்த பணிகள் முடிவடைந்த நிலையில் கட்டடம் இடிக்கப்பட்டு வருகிறது. 3 நாட்களுக்குள் இந்த கட்டடம் இடிக்கும் பணி முடிவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை இடிக்கும் பணி தொடங்கியது: 20 அடி உயர மேடை அமைத்து ஜா கட்டர் !
Reviewed by Admin
on
June 02, 2017
Rating: 5
Reviewed by Admin
on
June 02, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.