June 3, 2017
வங்கிகளில் இருந்து ரூ.2 லட்சம் ரொக்கமாக எடுத்தால் அபராதம்: வருமானவரித்துறை எச்சரிக்கை
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ந்தேதி கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிப்பதற்காக பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வங்கிகள் மூலம் திரும்ப பெறப்பட்டு அதற்கு பதில் புதிய ரூ.2000 நோட்டுகள் பொதுமக்கள் புழக்கத்துக்கு வினியோகிக்கப்பட்டன. பின்னர் வங்கிகளில் பணம் போடப்படுவது மற்றும் எடுப்பது போன்ற பணபரிவர்த்தனைகளை வருமானவரித்துறை கண்காணித்து வருகிறது. அதைத் தொடர்ந்து 2017-ம் ஆண்டு நிதி சட்டத்தின் மூலம் ரூ.2 லட்சம் அல்லது அதற்கு அதிகமான தொகையை ரொக்கமாக பரிவர்த்தனை செய்வதற்கு மத்திய அரசு தடைவிதித்துள்ளது. இந்த தடை நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் 1-ந்தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
அதன்படி வருமானவரிச் சட்டத்தில் புதிதாக சேர்க்கப்பட்டு இருக்கும் 269-எஸ்.டி. பிரிவில் ஒரே நாளில் மேற்கண்ட தொகையை ஒரே பரிவர்த்தனையாகவோ அல்லது ஒரு நிகழ்ச்சி தொடர்பான பரிவர்த்தனைக்கோ அல்லது தனிநபருக்கு அளிப்பதற்கோ தடைவிதித்துள்ளது.
எனவே ரூ.2 லட்சம் அல்லது அதற்கு அதிகமான தொகையை ரொக்கமாக பெறுவோருக்கு 100 சதவீத தொகை அபராதமாக விதிக்கப்படும் என்று வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக வருமானவரித்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வருமான வரிச்சட்டத்தின் 269-எஸ்.டி. பிரிவை மீறுவோருக்கு, அவர் எவ்வளவு தொகையை ரொக்கமாக பெறுகிறாரோ, அதே தொகை அபராதமாக விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்கிகளில் இருந்து ரூ.2 லட்சம் ரொக்கமாக எடுத்தால் அபராதம்: வருமானவரித்துறை எச்சரிக்கை
Reviewed by மறத்தமிழன்
on
June 03, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
June 03, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.