Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 16, 2017

மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு முயற்சி : 146 மாவட்டங்களில் விரைவில் திட்டம் !


மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான திட்டங்களை 146 மாவட்டங்களில் தீவிரமாக செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா இதனை தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 146 மாவட்டங்கள் மக்கள் தொகை கட்டுப்பாட்டுக்கு தடை கற்களாக அமைந்துள்ளதாக கூறினார்.

பரிவார் விகாஸ் என்ற பெயரில் மக்கள் தொகை கட்டுப்பாட்டு திட்டம் இந்த மாவட்டங்களில் தீவிரமாக செயல்படுத்தப்பட உள்ளது. குறிப்பாக உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான், பீகார், மத்தியபிரதேசம், சத்திஸ்கர், ஜார்கண்ட், அசாம் ஆகிய 7 மாவட்டங்களில் பரிவார் விகாஸ் திட்டம் மிக தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படும்.

மகப்பேறு மரணங்கள், பச்சிளங் குழந்தைகள் உயிரிழப்பு போன்ற சம்பவங்கள் மேற்கண்ட மாநிலங்களில் அதிகளவு நிகழ்வதாக கண்டறியப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் நட்டா கூறியுள்ளார்.

எனவே மக்கள் தொகையை கட்டுப்படுத்தவதற்கான விழிப்புணர்வு பிரச்சாரம், குடும்ப கட்டுப்பாட்டு திட்டத்தை தீவிரமாகசெயல்படுத்துவது அவசியமாகிறது என அவர் தெரிவித்துள்ளார்.  கர்ப்ப தடை சாதனங்களை இலவசமாக வழங்குவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக நடைமுறைப்படுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.