June 15, 2017
வங்க தேச நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 140ஆக அதிகரிப்பு..!
வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள தொடர் நிலச்சரிவினால், பலியானவர்களின் எண்ணிக்கை 140 ஆக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் கூடலாம் என்கிறார்கள்.
வங்கதேசத்தில் பருவ மழையின் காரணமாக, மலைப் பகுதிகளான சிட்டகாங், ராங்கமட்டி, பந்தர்பன் ஆகிய மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் ஏற்பட்ட மழையின் காரணமாக, பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், இந்தப் பகுதியிலுள்ள பெரும்பாலன வீடுகள் சேற்றில் மூழ்கியுள்ளன. இந்தப் பகுதியிலிருந்து சுமார் 10,000-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம்செய்யப்பட்டுள்ளனர்.
பழங்குடியின மக்கள் அதிகமாக வாழும் ராங்கமட்டி மாவட்டத்தில் மட்டும், 103 பேர் பலியாகியுள்ளனர். நிலச்சரிவு மற்றும் கடுமையான மழையின் காரணமாக சாலைகள் முழுவதுமாக சேதமாகியிருப்பதால், மீட்புப் படையினர் தம் பணியில் ஈடுபட முடியாமல் உள்ளனர். மீட்புப்பணியில் ஈடுபடுவதற்கு ஆட்கள் பற்றாக்குறை உள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது பலியானவர்களின் எண்ணிக்கை, 140-ஐ எட்டியுள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் தெரிகிறது. வங்கதேசத்தில் இது, வரலாறு காணாத ஒரு நிகழ்வாகக் கருதப்படுகிறது.
வங்க தேச நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 140ஆக அதிகரிப்பு..!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
June 15, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
June 15, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.