Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 18, 2017

ஓடிப்போனது ஒரு மல்லையா… ஓடாமல் இங்கே இருப்பதோ 12 மல்லையாக்கள்.. ரிசர்வ் வங்கி வெளியிட்ட அதிர்ச்சித்


மல்லையா தான் ஏதோ கடனை வாங்கிவிட்டு கட்டாமல் வெளிநாட்டிற்கு ஓடி விட்டார் என்று நினைத்து கொண்டிருக்கிறோம்.

மல்லையாவையே தூக்கி சாப்பிட இங்கே 12 தலைகள் வரிசையில் நிற்கின்றன.

பொதுத்துறை வங்கிகளில் 12 பேர் வாங்கிய வாராக்கடன் மட்டும் 175000 கோடி என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

பொதுத்துறை வங்கிகளுக்கான வராக்கடன்கள் குறித்து ஆய்வு செய்ய, ரிசர்வ் வங்கியின் ஆலோசனைக்குழு சமீபத்தில் பரிந்துரை செய்தது.

அதன்படி நடத்தப்பட்ட ஆய்வில் 12 பேர், பொதுத்துறை வங்கிகளில் தலா 5 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் கடன் வாங்கிவிட்டு, அதை செலுத்தாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பொதுத்துறை வங்கிகளுக்கு சுமார், ஒரு லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பாக்கி வர வேண்டியுள்ளதாக தெரியவந்துள்ளது.

எனினும், கடன் வாங்கி செலுத்தாத 12 பேரின் பெயர்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

நாடு முழுவதும் வங்கிகளில் வாராக் கடனாக 7 லட்சம் கோடி உள்ளது. அதில் 12பேரின் கணக்கில் 1 லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் வாராக் கடனாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.