Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 16, 2017

டிசம்பர் 12 பிறந்தநாளன்று சினிமா நடிகர் ரஜினி அரசியல் பிரவேசம் கர்நாடகாவில் ஆரம்பித்தால் நல்லா இருக்கும்


நடிகர் ரஜினிகாந்த் வரும் டிசம்பர் 12ல், அவரின் பிறந்தநாளன்று தனது அரசியல் பிரவேசத்தை அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மே மாதம் 15ம் தேதி முதல் தொடர்ந்து 5 நாட்கள் நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் தனது ரசிகர்களை சந்தித்தார். 12 வருடங்களுக்குப் பிறகு நடிகர் ரஜினி ரசிகர்களை நேரில் சந்தித்ததால் தமிழக அரசியலில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

அந்தச் சந்திப்பின்போது, "ஆண்டவன் விரும்பினால் அரசியலுக்கு வருவேன்" என்று ரஜினி கூறினார். அது பல அரசியல் கட்சித் தலைவர்களின் தூக்கத்தைக் கெடுத்தது.

ரஜினி அரசியலுக்கு வந்தால் எங்களுக்குப் பாதிப்பில்லை, இது ஜனநாயக நாடு யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்று கூறாத பேட்டியளிக்காத அரசியல் தலைவர்கள் இல்லை என்ற ரீதியில் இருந்தது தமிழக அரசியல்.

ரஜினி அரசியலுக்கு வரவேண்டும், அவர் பாஜகவில் இணைய வேண்டும் என பலரும் வெளிப்படையாகவே கூறினார்கள். ரசிகர்கள் சந்திப்பின் கடைசி நாளில் ஏதாவது முக்கிய அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்பட்டநிலையில், "போர் வரும்போது அதை எதிர்கொள்வோம்" என வழக்கம்போல் பூடகமாக பேசி, ரஜினி முற்றுப்புள்ளி வைத்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.