June 20, 2017
கேரளாவில் பரவுகிறது வைரஸ் காய்ச்சல்: நான்கு மாதத்தில் 118 பேர் பலியால் மக்கள் அச்சம்!
கேரள மாநிலத்தில் பரவிவரும் வைரஸ் காய்ச்சலால் பலர் உயிரிழந்துவருவதாக, அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.
பன்றிக் காய்ச்சல், டெங்குக் காய்ச்சல் என வைரஸ் காய்ச்சல்கள் கேரள மாநிலத்தில் அதிகளவில் பரவிவருகிறது. நூற்றுக்கணக்கான மக்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தொடர் சிகிச்சைபெற்றுவருகின்றனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பலர் உயிரிழந்துவருவதால், பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், வைரஸ் காய்ச்சலுக்குப் பலியானோரின் எண்ணிக்கை 118 ஆக உயர்ந்துள்ளது எனக் கேரள அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
பிப்ரவரி மாதத்திலிருந்து கேரளாவில் தொற்று மற்றும் வேகமாகப் பரவக்கூடிய வைரஸ் காய்ச்சல் அதிகமானோரைத் தாக்கிவருகிறது. இந்த நான்கு மாதங்களில் மட்டும் 118 பேர் பலியானது, மக்களை அச்சமடைய வைத்துள்ளது. குறிப்பாக திருவனந்தபுரம், கோழிக்கோடு, கொச்சி ஆகிய முக்கிய நகரங்களில் இந்தக் காய்ச்சலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறதாம்.
குப்பைகள், தேங்கிக்கிடக்கும் மழைநீர் ஆகியவற்றின் காரணமாகவே வைரஸ் காய்ச்சல் பரவுவதாக, சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், நகரங்களிலும் கிராமங்களிலும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நோய்த் தடுப்புக்கான அத்தனை முயற்சிகளையும் கேரள அரசு விரைந்து செயல்படுத்தும் என முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் பரவுகிறது வைரஸ் காய்ச்சல்: நான்கு மாதத்தில் 118 பேர் பலியால் மக்கள் அச்சம்!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
June 20, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
June 20, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.