Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 11, 2017

கடலில் மிதக்கும் சடலங்கள்… 116 பேருடன் மாயமான மர்ம விமானம்: வெளியாகியுள்ள புதுத்தகவல்..!



மலேசிய விமான விபத்தில் ஆரம்பித்து இன்றளவும் மர்மமான முறையில் பல விமானங்கள் காணாமல் போய் வருகின்றன.
முன்பெல்லாம் பெர்முடா முக்கோண பகுதியை சென்றடையும் விமானங்கள் மட்டுமே காணாமல் போய் வந்தன.
தற்போது சர்வசாதாரணமாக வானில் பறக்கும் விமானங்களும் காணாமல் போவது பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
இந்த நிலையில் தற்போது 116 பேருடன் சென்ற விமானம்  மியான்மரில் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளது.
மியான்மரின் Myeik நகரிலிருந்து Yangon நகருக்கு 105 பயணிகள் உட்பட 116 பேருடன் ராணுவ விமானமொன்று புறப்பட்டது.
நடுவானில் சென்று கொண்டிருந்தபோது டாவி நகரிலிருந்து 20 மைல்கள் தொலைவில், உள்ளூர் நேரப்படி சுமார் 1.30 மணியளவில் ராணுவ விமானத்துடனான தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன.
விமானத்தை தேடும் பணிகள் அவசர கதியில் முடுக்கி விடப்பட்டுள்ளன. விமானத்தை தேடும் பணியின் போது விமானத்தின் உதிரி பாகங்களும்,
பலியான நபர்களின் சடலங்களும் கண்டெடுக்கப்பட்டதாக மைக் நகரில் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
விமானம் வானில் பறந்த போது வானிலையில் எந்த விதமான இடர்பாடுகளும் இல்லை.
இதனால் தொழில்நுட்ப கோளாறே விபத்திற்கு  காரணமாக இருக்கலாம் என விமானத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எது எவ்வாறாயினும் விமானத்தின் கறுப்பு பெட்டி கண்டெடுக்கப்பட்டாலே காரணம் தெரியவரும்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.