June 5, 2017
கங்கை நதி 10 ஆண்டுகளில் முழுமையாக தூய்மைப்படுத்தப்படும் : மத்திய அமைச்சர் உமாபாராதி
கங்கை நதி 10 ஆண்டுகளில் முழுமையாக தூய்மைப்படுத்தப்படும் என மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி தெரிவித்துள்ளார். உத்திரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற கங்கை தசரா விழாவில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கங்கையை தூய்மைப்படுத்தும் மற்றும் பாதுகாக்கும் பணி 3 கட்டங்களாக நடைபெறும் என்றார். இந்த பணிகள் எந்த கால இடைவெளியும் இல்லாமல் தொடர்ச்சியாக நடைபெறும் என மத்திய அமைச்சர் உமாபாராதி கூறினார்.
கங்கையை தூய்மைப்படுத்தும் முதற்கட்டப் பணி 2 ஆண்டுகளுக்கும், இரண்டாம் கட்டப் பணி 4 ஆண்டுகளுக்கும் நடைபெறும் என கூறினார். கங்கை கரையில் உள்ள தோல் பதனிடும் தொழிற்சாலைகளை வேறு இடத்திற்கு மாற்றுவது குறித்து உத்திரப்பிரதேச அரசு ஆலோசனை நடத்தி வருவதாக உமாபாரதி தெரிவித்தார். கங்கை நதியின் தூய்மையை பாதுகாப்பது குறித்து கங்கோத்தியில் இருந்து, கங்கா சாகர் வரை விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொள்ளப் போவதாகவும் அவர் கூறினார்.
கங்கை நதி 10 ஆண்டுகளில் முழுமையாக தூய்மைப்படுத்தப்படும் : மத்திய அமைச்சர் உமாபாராதி
Reviewed by மறத்தமிழன்
on
June 05, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
June 05, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)






No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.