May 5, 2017
உங்க மொபைல்ல இருக்குற ஐஎம்இஐ (IMEI)நெம்பர வச்சு என்னல்லாம் பண்ணலாம் தெரியுமா?
நாம் வெளியிடங்களுக்குச் செல்லும் போது எதிர்பாராமல் மொபைல் போன் தொலைந்து விட்டால் உடனடியாக நாம் அந்த எண்ணுக்கு போன் செய்வோம்.
சுவிட்ச் ஆப் செய்யப்பட்ட பின் மொபைல் இருக்கும் இடத்தைக் கண்டறிய முடியுமா? என்றால் கண்டிப்பாக முடியும்.
நம் அனைவரின் மொபைல் போனுக்கும் தனித்தனியாக ஐஎம்இஐ (IMEI) நம்பர் கொடுக்கப்பட்டு இருக்கும். இதன்மூலம் நம் மொபைல் இருக்கும் இடத்தை எளிதாகக் கண்டறிய முடியும்.
ஐஎம்இஐ (IMEI) நம்பர்
ஐஎம்இஐ (IMEI)நம்பர் என்பது நம் மொபைலில் உள்ள 15 இலக்க எண்ணாகும். மொபைல் போன் எந்த நாட்டை சேர்ந்தது, தற்போது எந்த நெட்வொர்க்கில் உள்ளது என்பதை அறியப் பயன்படுகிறது.
பேட்டரியின் பின்புறத்தில் ஐஎம்இஐ (IMEI)நம்பர் குறிப்பிடப்பட்டிருக்கும். இதனை மொபைலில் *#06# என்னும் எண்ணுக்கு அழைத்தும் நம்முடைய போன் எங்கு இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள முடியும்.
2003-ம் ஆண்டில் முதன்முதலாக அஸ்திரேலியாவில் தான் இந்த எண் அறிமுகப்படுத்தப்பட்டது. போலியாக வரும் மொபைல் போன்களை அடையாளம் காணவே இது பயன்படுத்தப்பட்டது.
ஐஎம்இஐ (IMEI)நம்பரை வைத்து மொபைல் இருக்கும் இடத்தை அறிவதோடு மட்டுமல்லாமல் இந்த எண்ணை வைத்து நம்முடைய மொபைல் இருக்கும் இடத்தையும் அந்த மொபைலின் செயல்பாடுகளையும் மிக எளிதில் நம்முடைய கட்டுபாட்டிற்குள் கொண்டு வருவதும் எளிது.
மொபைலில் வேறு சிம் கார்டு பயன்படுத்தப்பட்டாலும் இந்த எண்ணின் மூலம் அந்த சிம் கார்டு எண்ணை அறிய இயலும்.
சாதாரண நபர்களால் மொபைலை கட்டுபாட்டிற்குள் கொண்டு வரவோ அல்லது மற்ற விவரங்களை தெரிந்து கொள்ளவோ இயலாது. ஆனால் மொபைல் நிறுவனங்களுக்கு இது சாத்தியமே.
எனினும் மொபைல் நிறுவனங்கள் அவ்வளவு எளிதாக இந்த விவரங்களை யாருக்கும் தருவதில்லை.
சில ஹேக்கர்கள் இரகசியமாக இந்த வேலை செய்து மற்றவர்களின் விவரங்களை எளிதாக திருடிவிடுகின்றனர்.
ஐஎம்இஐ (IMEI)நம்பரை பயன்படுத்தி காணாமல் போன மொபைல் போன் இருக்கும் இடத்தை அறியலாம்.
ஒருவேளை அந்த மொபைல் போனில் சிம் கார்டு மாற்றப்பட்டாலும் அது இருக்கும் இடத்தினை கண்டறிவது மிக எளிது தான்.
உங்க மொபைல்ல இருக்குற ஐஎம்இஐ (IMEI)நெம்பர வச்சு என்னல்லாம் பண்ணலாம் தெரியுமா?
Reviewed by Admin
on
May 05, 2017
Rating: 5
Reviewed by Admin
on
May 05, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.