Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 17, 2017

எடப்பாடிக்கு தோப்பு வைக்கும் ஆப்பு.. கூவத்தூர் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.. அதிருப்தியாளர்கள் ரகசிய கூட்டம்


ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக சசிகலா மற்றும் பன்னீர் செல்வம் அணி என இரண்டாக பிரிந்தது. இதனை அடுத்து சசிகலா முதல்வராக பதவி ஏற்க முயற்சிகள் நடந்தது. அதிமுக எம்.எல்.ஏக்கள் பன்னீர் அணிக்கு தாவுவதை தடுக்க கூவத்தூர் ரெசார்ட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றதால் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவி ஏற்றார். முன்னதாக கூவத்தூர் ரெசார்ட்டில் எம்எல்ஏக்களுக்கு பதவி 3 கிலோ தங்கம் மற்றும் கோடிக்கணக்கில் பணம் கொடுத்ததாக பரபரப்பாக பேசப்பட்டது.

இன்னும் சிலருக்கு அமைச்சரவையில் இடம் போன்ற பல்வேறு வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. தற்போது அதிமுகவில் பிரிந்த அணிகளை ஒன்று சேர்க்கும் முயற்சிகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அதிருப்தி எழுந்துள்ளது. கூவத்தூர் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என இந்த அதிருப்தி எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே அதிருப்தி எம்.எல்.ஏக்கள் சென்னை சட்ட மன்ற உறுப்பினர் விடுதியில் ரகசிய கூட்டம் நடத்தி உள்ளனர்.


தோப்பு வெங்கடாசலம் தலைமையில் நடந்த கூட்டத்தில் பழனியப்பன், செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக நடந்த இந்த ரகசிய கூட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.