May 30, 2017
ஜெ., சசி சொத்துக்கள் பறிமுதல்.. எந்தெந்த மாவட்ட சொத்துக்கள் பறிபோகின்றன?
சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோரின் சொத்துகள் பறிமுதல் செய்ய எந்த 6 மாவட்டங்களின் ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த 1991-96-ஆம் ஆண்டு வரை வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் பெங்களூர் தனி நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும், 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தது. அதேபோல் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டு சிறைதண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.
அபராதத் தொகையை வசூலிக்க அவர்கள் 4 பேரது சொத்துகளை முடக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி தமிழகத்தில் உள்ள 68 சொத்துகளை பறிமுதல் செய்ய தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககம் 6 மாவட்டங்களின் ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டது.
அந்த வகையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், தூத்துக்குடி, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜெ., சசி சொத்துக்கள் பறிமுதல்.. எந்தெந்த மாவட்ட சொத்துக்கள் பறிபோகின்றன?
Reviewed by மறத்தமிழன்
on
May 30, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
May 30, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.