Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 17, 2017

இறுதியில் இணைய ஒப்பு கொண்ட ஓபிஎஸ்..!! இடையூராக இருந்த கருப்பு ஆடு இவரா?? அதிமுக அணிகள் இணைவதில் எங்க


அதிகமுகவின் இரு அணிகள் ஒன்றாக இணைவதில் தொடந்து முன்னுக்கு பின் முரண்படான கருத்துகளை அமைச்சர்கள் தெரிவித்து வந்த நிலையில், இரு அணிகளும் இணைவதில் சிக்கல் உண்டாகி வந்தது.
அதிமுக அம்மா அணியின் மூத்த தலைவர் தம்பிதுரை கூறுகையில் அதிமுக ஒன்றுப்பட்ட இயக்கம் தான், அதில் ஏற்பட்டுள்ள சில கருத்து வேறுபாடுகள் தற்போது பிரிந்து உள்ளது.
இதற்கான விரைவில் தீர்வு காணப்பட்டு விரைவில் இரு அணிகளும் ஒன்றாக இணையும் என்று தெரிவித்து இருந்தார்.
இதனிடையே புரட்சி தலைவி அம்மா அணியில் உள்ள முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியன் அவர்கள் சசிகாலா குடும்பத்தினரை நீக்க வேண்டும்,
ஜெயலலிதா மரணத்துக்கு நீதி விசாரணை வேண்டும் என்ற இரு கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே பேச்சுவார்த்தை தொடங்கும்.
இந்த இரு அணிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடக்கமால் இருக்க அனைத்து முயற்சிகளிலும் அமைச்சர் ஜெயக்குமார் செய்கிறார் என்று கூறி வந்தனர்.
தற்போது அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவை தொகை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை விமான நிலையத்தில்,
போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தை முதலமைச்சர் நேரடியாக கவனம் செலுத்தி பிரச்சனையை தீர்க்க வேண்டும்என கூறினார்.
விமான நிலையத்தில், செய்தியாளர்களிடம் ஓ.பன்னீர்செல்வம் கூறியது,
அதிமுகவின் இரு அணிகள் இணைவதில், எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.
இதில் எங்கள் அணியில் எந்த முட்டுக்கட்டையும் இல்லை. எப்போது பேச்சு வார்த்தைக்கு அழைத்தாலும், நாங்கள் தயார்.
போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, நேரடி கவனம் செலுத்தி, பிர்ச்சனையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாநிலம் முழுவதும் குறைந்த அளவு பஸ்களே ஓடுகின்றன. இதனால், மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.