May 13, 2017
கண்ணமங்கலம் அருகே பயங்கரம் : ராணுவ அதிகாரியின் மனைவி பலாத்காரம் செய்து கொலை
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த காட்டுக்காநல்லூர் அருகே உள்ள ராமசந்திராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் (45). ராணுவ அதிகாரி. இவரது மனைவி காந்தரூபி (40). மகன் சக்திவேல்(16). இவர் பிளஸ் 1 படித்து வருகிறார். சங்கர், அசாம் மாநிலத்தில் வேலை செய்து வருவதால் காந்தரூபி மகனுடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை சக்திவேல் வழக்கம்போல் டியூசன் சென்றுவிட்டு இரவு வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. சமையல் அறையில் காந்தரூபி ரத்தக்காயங்களுடன், நிர்வாணமாக இறந்து கிடப்பதை கண்டு கதறினார்.
தகவல் அறிந்து கண்ணமங்கலம் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், காந்தரூபி தனியாக இருப்பதை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் வீட்டினுள் புகுந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுவிட்டு, பீரோவில் இருந்த 70 சவரன் நகைகள், ₹50 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. தடயங்களை அழிப்பதற்காக வீட்டில் மிளகாய் பொடியை தூவிவிட்டு சென்றுள்ளனர். காந்தரூபியின் சடலத்தை போலீசார் கைப்பற்றி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து 2 பேரை சந்தேகத்தின்பேரில் பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கண்ணமங்கலம் அருகே பயங்கரம் : ராணுவ அதிகாரியின் மனைவி பலாத்காரம் செய்து கொலை
Reviewed by மறத்தமிழன்
on
May 13, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
May 13, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.