Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 30, 2017

ஆட்டோ சங்கரை உருவாக்கிய காவல்துறை : வீரப்பன்களையும், தாதாக்களையும் அவர்களே..!


ஆட்டோ சங்கர், அவ்வளவு சீக்கிரம் யாரும்  மறந்திருக்க முடியாது..! அயோத்திக் குப்பம் வீரமணி,கபிலன், ஆசைத்தம்பி, பங்க் குமார், வெள்ளை ரவி, சேரா,மாட்டு ரவி, இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்..

இவர்களில் சேரா தவிர அனைவரும் போலீஸ் என்கவுண்டர் மூலம் கொலை செய்யப் பட்டவர்கள். இதில் எண்பதுகளில் தூக்கு தண்டனை மூலம் இறந்தவர் ஆட்டோ சங்கர்.


இவர் இறப்பதற்கு முன்பு ஒரு புலனாய்வு வார இதழுக்கு மரண வாக்கு மூலம் என்கிற சுய சரிதையை எழுதினார்.

அதில், “நான் திருந்த நினைத்த நேரங்களில் எல்லாம் காவல்துறை என்னை அழைத்து கள்ளச் சாராயம் ஓட்டச் சொல்லி அடிப்பார்கள்.

போலீஸ் என்னை பெண் தேவைகளுக்காக அணுகியது. அதனால் தான் நான் அதிலும் ஈடுபட்டேன்” என்று தனது சாவின் விளிம்பில் சொல்லி இருந்தார்.

சந்தனக் கடத்தல் வீரப்பன் செய்தவைகள் தவறாகவே இருப்பினும் காவல் துறையினர் வீரப்பன் கிராமத்தினருக்கு மற்றும் பெண்களுக்கு இளைத்த கொடூரங்கள் மிக அதிகம்.

வீரப்பனை பிடிக்கிறேன் என்கிற பெயரில் அந்த மலை கிராமத்தில் நடத்திய கொடுமைகள் சொல்லி மாளாது. வீரப்பனை உக்கிரமாக்கியதில் காவல் துறையின் பங்கு அதிகம் என்கிறது வீரப்பன் குறித்த  நூல்கள்.

இது தவிர கூலிப் படை தலைவர்கள், ஏரியா ரவுடிகள் என அவர்களுக்கு அதிகம் இம்சை கொடுப்பதும், அவர்கள் ஏதாவது அரசியல்வாதிகளிடம் தஞ்சம் அடைவதும் சர்வ சாதாரண ஒரு விஷயம். அதாவது 1990கள் வரை.

அப்புறம் அவரகளின் குடைச்சல்கள் அதிகம் ஆனதும் என்கவுன்டர் மூலம் தீர்த்து கட்டி விடுகிறது காவல் துறை.!

ஆனால் இப்போது ஆட்டோ சங்கர்கள் இல்லை, வீரப்பனார்கள் இல்லை. தாதாக்கள் இருகின்றனர். கூலிப் படைகள் இருக்கிறது..!

காவல்துறையும் இருக்கிறது. ஆனால் ஸ்டைல் மாறி இருக்கிறது. சிறைச்சாலைகள் கொலைகளுக்கு திட்டம் போடும் இடங்கள் என்கிறார்கள்.

அங்கு கஞ்சா கிடைகிறது, செல்போன்கள் கிடைகிறது..! கூட்டாளிகள் கிடைகிரார்கள். உள்ளே இருந்த படியே கோடிகள் சம்பாதிக்கிறார்கள்.

வெளியே வருகிறார்கள். கொலைகள் செய்கிறார்கள். உல்லாசம் அனுபவிக்கிறார்கள். அவ்வப்போது காவல் துறை என்கவுன்டர் செய்கிறது..!

இங்கு ஒரே ஒரு கேள்வி நண்பர்களே..! காவல்துறை என்பது குற்றங்களை தடுக்க வேண்டும்.

குற்றவாளிகளை திருத்த வேண்டும் என்பது தானே முறை.! ஆனால் இங்கு ஏன் அப்படி எதுவும் நடப்பதில்லை..!

தவறு எங்கே இருக்கிறது..? குற்றவாளிகளை உருவாக்குவதும் பின்னர் அவர்களை சுட்டுக் கொலை செய்வதும் பாவம் இல்லையா.!?

இந்த கேள்வி உண்மையாக கடமை உணர்வுடன் பணி செய்யும் போலீஸ் அதிகாரிகளுக்கான கேள்வி அல்ல

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.