Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 31, 2017

மத்திய அரசின் மாட்டிறைச்சி தடை உத்தரவால் பூங்கா விலங்குகளுக்கு உணவு கிடைப்பதில் சிக்கல்!


மத்திய அரசின் மாட்டிறைச்சி தடை உத்தரவால் வன உயிரின பூங்கா விலங்குகளுக்கு உணவு கிடைப்பதில் சிக்கல் ஏறபட்டுள்ளது. இறைச்சிக்காக மாடுகளை விற்கக்கூடாது என்றும், விவசாயப் பணிகளுக்கு, வாங்கக்கூட கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்றும், மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், வன உயிரின பூங்காக்கள், மிருகக் காட்சி சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள விலங்குகளுக்கு, உணவு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, மைசூரில் உள்ள மிருகக் காட்சி சாலையில் அடைக்கப்பட்டுள்ள காட்டு நாய்கள், புலி, சிங்கம் போன்றவற்றுக்கு ஆண்டுதோறும் சுமார் 113.15 டன் மாட்டிறைச்சி தேவைப்படுகிறது. இந்த மாட்டிறைச்சி குறிப்பிட்ட இடைவெளிகளில் புலி, சிங்கம், காட்டு நாய்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மத்திய அரசு விதித்துள்ள திடீர் தடை காரணமாக, மைசூர் மிருகக் காட்சி சாலையில் உள்ள இந்த விலங்குகளுக்கு, இரை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக, ஊழியர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மாற்று உணவை ஏற்பாடு செய்து விநியோகித்தாலும், அவற்றை இந்த விலங்குகள் ஏற்பதில்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.