Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 1, 2017

பி.இ. படிப்புக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்


பொறியியல் கல்வி மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை இன்று முதல் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு தொடங்கியது. விண்ணப்பங்களை இன்று முதல் மே 31-ம் தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம். 12-ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ள மாணவ, மாணவிகள் www.tnea.ac.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 3-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான ரேண்டம் எண் ஜூன் 20-ம் தேதியும், தரவரிசைப் பட்டியல் ஜூன் 22-ம் தேதியும் வெளியிடப்பட உள்ளது. பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் 27-ம் தேதி தொடங்குகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.