May 29, 2017
மோரா புயல்.. சென்னையில் சூறை காற்றுடன் மழை.! பொதுமக்களை மிரட்ட வந்துவிட்டது.!
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இதன் காரணமாக உருவான புயலுக்கு மோரா என்று சென்னை வானிலை மையம் பெயரிட்டுள்ளது.
இந்த புயல் காரணமாக கடலோர மாவட்டங்களில் புயல் கூண்டு ஏற்றப்பட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், சென்னையில் நாளை கரையை கடக்கும் என்று தெரிவித்த நிலையில் இன்று முதல் சூறைக்காற்றுடன் மழை பெய்யத் துவங்கியுள்ளது.
வடசென்னை, திருவொற்றியூர், மெரினா, ராயபுரம், காசிமேடு, திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்து வருகின்றது.
நாளை மோரா புயல் கரையை கடக்கும் நிலையில் இன்றே மழை பெய்வதால் பொதுமக்களுக்கு மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2015ம் ஆண்டு பெய்த பேய் மழை போன்று வந்துவிடுமோ என்று பொதுமக்கள் கவலையுடன் உள்ளனர்.
மோரா புயல்.. சென்னையில் சூறை காற்றுடன் மழை.! பொதுமக்களை மிரட்ட வந்துவிட்டது.!
Reviewed by மறத்தமிழன்
on
May 29, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
May 29, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.